- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகேவோட 64 ஆவது படத்துக்கு ஒப்பந்தமே போட்டாச்சா... இந்த விடாமுயற்சி, அப்புறம் குட் பேட் அக்லிலாம்...

ஏகேவோட 64 ஆவது படத்துக்கு ஒப்பந்தமே போட்டாச்சா… இந்த விடாமுயற்சி, அப்புறம் குட் பேட் அக்லிலாம் பின்னாடி போங்கப்பா… மிரட்டலான இயக்குனருடன் அஜித்குமார் ஆன் தி வே….

- Advertisement -

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக தனது ரசிகர்களுடன் தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் அஜித் குமார். இவர் நடிப்பில் ஒரு திரைப்படம் வந்துவிட்டால் போதும் அந்த இடம் தீபாவளியாக மாறிவிடும். கொண்டாட்டத்திற்கு எள்ளளவும் குறை இருக்காது. பெயர் தேவையில்லை இயக்குனர் தேவையில்லை அஜித் ஒருவரே போதும் திரையரங்கு நிரம்பி விடும்.

 

- Advertisement -

அந்த அளவுக்கு ஒரு ரசிகர் பட்டாளத்தை தனது கையில் வைத்திருக்கிறார் அஜித்குமார். நடிப்பு மட்டுமல்லாமல் தனக்கு பிடித்தமான கார் ரேஸ் பைக் ரேஸ் மற்றும் துப்பாக்கி சுடுதலிலும் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். நடுவே நடிப்பிற்கு சில காலம் முழுக்கு போட்டுவிட்டு அவர் தீவிரமாக பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தார்.

 

- Advertisement -

இந்தியா மட்டுமல்லாமல் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் அவர் பைக்கில் சுற்றினார். இந்த சூழலில் தற்போது மீண்டும் தனது திரையுலக கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் அஜித் குமார். இதில் அவரது ரசிகர்களே நம்ப முடியாத அளவுக்கு தற்போது இரண்டு திரைப்படங்களில் அஜித் குமார் பிஸியாக நடித்து வருகிறார்.

 

இதில் ஒன்று மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படம். இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், தற்போது அங்கு சூட்டிங் நிறைவடைந்துள்ளது. ஹைதராபாத்தில் சில காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்கள். இதேபோல் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அஜித் குமார் நடித்தார்.

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் அஜித்தின் 64 ஆவது திரைப்படம் தற்போது உறுதியாகி இருக்கிறது. கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த பிரசாந்த் நீல்தான் இந்த படத்தை இயக்குகிறார்.

 

இதற்காக கையெழுத்து நேற்று போடப்பட்டிருக்கிறது. மிக பிரம்மாண்டமான முறையில் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் அஜித் குமாருடன் அவர் இணைகிறார் அதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டதாம். அது வேறு ஒன்றும் இல்லை கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகம் என்று கூறப்படுகிறது. அதில் அஜித் குமார் வருவதாக சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த எதிர்பாராத கூட்டணியால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்திருக்கிறார்கள்.

 

- Advertisement -

சற்று முன்