தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு மறைமுகமாக ஒரு போட்டியே நடக்கும். நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதோடு, அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் வாய்ப்பு அமையும். அதனால், புதுப்படங்கள் ஷூட்டிங் நடந்தால், வாழ்த்து சொல்வது போல சென்று எனக்கு வாய்ப்பும் கேட்டு விடுவேன் ஒரு நேர்காணலில் காமெடி நடிகர் வையாபுரி கூறியிருந்தார்.
வையாபுரி போன்ற பிரபல காமெடி நடிகர்களே இப்படி வாய்ப்பு தேடும்போது, புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு என்பது அவர்கள் நடிக்கும் படங்கள் நல்ல வெற்றியை பெறும்போது, ரசிகர்களின் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெறுகின்றனர். அப்போது பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.
நாச்சியார், லவ்டுடே படங்களில் நடித்தவர் நடிகை இவானா. இதில் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் ஜோடியாக இவானா, வேலைக்கார பெண் கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் கவனிக்கப்பட்ட அவர் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.
ஆனால், பிரதீப் ரங்கநாதனுடன் நடித்த லவ்டுடே படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த படம் மூலம் படத்தின் இயக்குநர், நடிகரான பிரதீப் ரங்கநாதன் மட்டுமின்றி படத்தில் நடித்த இவானாவுக்கு இந்த படத்தில் பெரிய வரவேற்பும் கிடைத்தது. அதுவும் மாமாகுட்டி என்ற இவரது டயலாக்கும் டிரண்டிங் ஆகி விட்டது.
இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் விஜய் 68 படத்தில், நடிகை இவானாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் தங்கையாக இவானா நடிக்கிறார் என்றும் சில வாரங்களுக்கு முன் தகவல் பரவியது. லவ்டுடே படம் மூலம் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால், இன்னும் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாக மாறுவார் என அனைவரும் கருதினர்.
ஆனால், விஜய் 68 படத்தில் நடிக்க இவானா மறுத்துவிட்டதாக இப்போது லேட்டஸ்ட் தகவல் வந்துள்ளது. இந்த படத்தில், விஜய் தங்கையாக இவானா நடிக்கவில்லை என்றும், வேறு கேரக்டர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன், இதில் இந்த கேரக்டரில் நான் நடித்தால் தொடர்ந்து இதே போன்று தான் நான் நடிக்க வேண்டியது வரும் என்பதால் இவானா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நல்ல சான்ஸை இவானா மிஸ் பண்ணிட்டாரே என்றுதான் சொல்ல தோன்றுகிறது.





