கடந்த 2022ம் ஆண்டு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. இந்த படத்தில் நடித்த அல்லு அர்ஜூனா, புஷ்பராஜ் என்ற கேரக்டரில் ஹீரோயிசம் நிறைந்த ஒரு அற்புத நடிப்பை தந்திருந்தார். சண்டை காட்சிகளில் அதகளம் செய்திருந்தார்.
அதேபோல், இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனாவுக்கும் புஷ்பா படம் மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்தது. அய்யா சாமி, பாடல் காட்சியில் மிகச்சிறப்பாக நடனமாடி, ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த ராஷ்மிகா மந்தனா இப்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார்.
புஷ்பா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இப்போது வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2024ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி புஷ்பா 2ம் பாகத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடித்தவர் ஜெகதீஷ் பிரதாப். இவர் ஹீரோ அல்லு அர்ஜூன் படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இருப்பார். கேசவா என்ற கேரக்டரில் நெருங்கிய நண்பராக நடித்த அவர், ராஷ்மிகா மந்தனா ஹீரோவை காதலிக்க தேவையான ஏற்பாடுகளை செய்வார். அவ்வப்போது ஹீரோ குறித்து பேசி, அவரது நடவடிக்கைகளை ரசிகர்களுக்கு தெரிவிப்பார். இந்த படத்தில், ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகமும், வரவேற்பும் அவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், புஷ்பா 2 படத்திலும் ஜெகதீஷ் பிரதாப், கேசவா கேரக்டரில் நடித்து வந்தார். புஷ்பா முதல் பாகத்தை போலவே, 2வது பாகத்திலும் அல்லு அர்ஜூன் நண்பராக படம் முழுவதும் அவர் வருவது போல, காட்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் திடீரென நேற்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அதற்கு காரணம், இளம் நடிகை ஒருவருடன் ஜெகதீஷ் பிரதாப், லிவ் இன் ரிலேஷன்சிப் முறையில், தாலி கட்டாமல், திருமணம் செய்யாமல் அந்த பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டார். அதற்கு ஜெகதீஷ் பிரதாப் தொல்லை தான் காரணம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒருவாரமாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் நேற்று கைது செய்தது, தெலுங்கு படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





