- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதையும் ஏகே சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே? கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை… அஜீத்குமார்...

அதையும் ஏகே சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே? கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை… அஜீத்குமார் சொன்ன தகவல் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

- Advertisement -

எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்துக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளிவராதது அஜீத் ரசிகர்களை விரக்தியடைய செய்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் விடாமுயற்சி குட்பேட் அக்லி படங்களை முடித்துவிட்டு நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் நடந்து வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார்.

இதற்காக அஜீத்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அஜித்குமார் துவங்கி உள்ளார். மேலும் துபாயில் நடைபெற உள்ள 24 எச் என்ற கார் ரேஸூக்கான பயிற்சியில் தற்போது அஜீத்குமார் தனது அணி வீரர்களுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அப்படி பயிற்சியில் ஈடுபட்ட போது சில தினங்களுக்கு முன்பு அஜீத் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது.

- Advertisement -

கார் சென்ற பாதையின் அருகே இருந்த தடுப்பு சுவரில் வேகமாக கார் மோதிய நிலையில், காரின் முன்புறம் பலத்த சேதமடைந்தது. ஆனால் அஜீத்குமார் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயங்களும் இன்றி உயிர்தப்பினார். அவர் பாதுகாப்பு உடைகள், பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிந்து இருந்ததால் காயம் இன்றி தப்பியதாக கூறப்படுகிறது.

அடுத்த நாள் மீண்டும் அவர் வழக்கம் போல் பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் அஜீத் குமார் கார் ரேஸிங் அணி பங்கேற்கும் 24 எச் ரேஸிங் நடந்து வருகிறது. அதற்கு தயாராகியுள்ள அஜீத் குமார் மற்றும் அவரது அணி வீரர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தாங்கள் போட்டிக்கு தயார் என்பதை தங்களது ரசிகர்களுக்கு பகிரங்கப்படுத்தி உள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் அஜீத்குமார் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நான் கடந்த 2002 2003 2004ம் ஆண்டுகளில் கார் ரேஸ்களில் கலந்து கொண்டேன். ஆனால் 2004 தொடரில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. 2010ம் ஆண்டில் யூரோப்பியன் பார்முலா ரேஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால், இடையில் போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

தற்போது கார் பந்தய ஓட்டுனராக மட்டுமின்றி உரிமையாளராகவும் இந்த போட்டியில் கலந்துள்ளேன். நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அஜீத்குமார் கூறியிருக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் வரை இந்த கார் ரேஸ் நடக்கிறது. அதற்குப் பிறகுதான் அவர் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ் இவர்கள் 3 பேரில் ஒருவர்தான் அடுத்த அஜித்குமார் படத்தை இயக்கப் போகிறார். அது யார் என்ற தகவலையும் ஏகே சொல்லி இருக்கலாம் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்