- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் உருவாகிறதா? அப்போ மீண்டும் சந்தானம் காமெடியனாக வளம் வரப்போகிறாரா?

பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகம் உருவாகிறதா? அப்போ மீண்டும் சந்தானம் காமெடியனாக வளம் வரப்போகிறாரா?

- Advertisement -

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் ஆர்யா நாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். அதேசமயம் காமெடியனாக சந்தானம் இடம் பெற்றிருந்தார்.

ஆர்யா மற்றும் சந்தானம் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த படத்தில் செய்த காமெடிகள் அனைத்தும் இன்று வரை பிரபலம் என்றே கூறலாம். அதன் காரணமாக இந்த படம் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாவது பாகம் துவங்கப்படும் என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. காமெடிக்கு பெயர்போன இயக்குனரான ராஜேஷ், சிவா மனசுல சக்தி திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அடுத்தடுத்து அவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அவர் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த படத்தில் இருந்த காமெடி டிராக் தான் என்றால் அது மிகையாகாது. சந்தானம் தனது முழுமையான காமெடி பலத்தையும் அவரது படங்களில் வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான ஓகே ஓகே படத்தில் சந்தானம் செய்த காமெடிகள் எல்லாம் உச்சபட்சம் என்றே கூறலாம். இப்படி காமெடி ஜோனரில் தனது வலுவான திரை முத்திரையை பதித்திருந்தார் ராஜேஷ்.

- Advertisement -

அந்த வகையில் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நண்பேண்டா என்று சந்தானமும் ஆர்யாவும் ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளும் வசனம் இன்றளவும் பிரபலம். அதேபோல் ஆர்யா மற்றும் நயன்தாராவுக்கு இடையே இருந்த காதல் கெமிஸ்ட்ரியும் அந்த படத்திற்கு வலு சேர்த்தது. இவை அனைத்தையும் தூக்கி நிறுத்தும் வகையில் யுவனின் பின்னணி இசையும் பாடல்களும் இருந்தன.

இந்த நிலையில் தான் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்குவதில் இயக்குனர் ராஜேஷ் தீவிரமாக உள்ளாராம். விரைவில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது சந்தானம் ஹீரோவாக நடித்து வருவதால் பாஸ் என்கிற பாஸ்கரன் இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பாரா என்பது கேள்விக்குறியே. இருப்பினும் ஆர்யா சந்தானம் கூட்டணி அதிலும் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதே போல் இரண்டாம் பாகத்திலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் எம் ராஜேஷ் ஓகே ஓகே படத்துக்கு பிறகு இயக்கிய படங்கள் எல்லாம் பெரிய அளவில் சொதப்பியது. அதேபோல் வசூல் ரீதியாகவும் தோல்வியுற்ற படங்களாகவே இருந்துள்ளன. இதன் காரணமாக வெற்றியை கொடுத்து தனது முத்திரையை பதித்தாக வேண்டும் என்ற ஒரு நிலையில் ராஜேஷ் இருப்பதால், இந்த படத்திற்காக அவர் அதிகம் மெனக்கெடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்