நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அதனால் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த் அனிருத் நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசாக வழங்கினார்.
அப்போதே ஜெயிலர் 2 படத்தை உருவாக்கவும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு அதற்காக ரஜினி ஒப்புதலையும் வாங்கிவிட்டது. இயக்குனர் நெல்சனுக்கும் கணிசமான ஒரு தொகை அட்வான்ஸ் ஆக தரப்பட்டது. ஜெயிலர் 2 படத்துக்கும் இசை அனிருத் தான். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஜெயிலர் 2 படம் ரிலீஸ் முதலில் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி என்று தகவல் வெளியானது. சுதந்திர தின விழாவுக்கு முந்தைய நாளில் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டது. பிறகு செப்டம்பர் மாதம் 3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாட்கள் என்பதால் அந்த தேதியும் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த தேதியும் முடிவாகவில்லை. அந்த நாளில் நடிகர் சூரி நடித்த மண்டாடி படம்தான் இப்போது ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஆகஸ்ட் 13ம் தேதி சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் ரிலீஸ் ஆவதால் அந்த நாளை திட்டமிட்டு இருந்த மண்டாடி படம், செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளி போய்விட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் தீபாவளிக்கு தான் ரிலீஸ் என்று உறுதியாகி விட்டது. சமீபத்தில் இந்த படத்தின் வியாபாரம் குறித்து பேச சில வினியோகஸ்தர்கள் சன் பிக்சர்ஸ் நிர்வாகத்தை அணுகிய போது, இப்போதைக்கு வியாபாரம் பேசவில்லை. நாங்களே உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
அதனால் தீபாவளிக்கு ரிலீஸ் என திட்டமிட்டிருந்த சேயோன் படம் தீபாவளிக்கு சில வாரங்கள் முன்னதாகவே திரைக்கு வர உள்ளது. ரஜினி படத்துடன் தன் படம் போட்டியிடக் கூடாது என படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். மேலும் அந்த படத்தை தயாரிப்பது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான். அதே நிறுவனம்தான் ரஜினியின் 173 படத்தையும் தயாரிக்க உள்ளது. ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசன் படமும் தீபாவளி ரிலீஸ் என்ற நிலையில் அரசன் படம் தீபாவளிக்கு வருமா, ஜெயிலர் 2 வருகையால் தள்ளிப் போகுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது.





