நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் இருவருமே இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பாணா காத்தாடி என்ற படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள். கடந்த 2010ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
ஆனால் இந்த படத்தில் இடம்பெற்ற யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பிரபலமாகின. அடுத்து அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் ஈட்டி இரும்பு குதிரை கணிதன் செம போதை ஆகாதே பூமராங் சண்டிவீரன் குருதி ஆட்டம் 100 இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் அதர்வா நடித்தார்.
சமந்தா தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக மாறினார். அவர் நடித்த மெர்சல் தெறி நான் ஈ இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. அவரது படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அவரை மேலும் பிரபலமாக்கியது. அடுத்து அதர்வாவும் சமந்தாவும் இணைந்து நடிக்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்தாலும் ஒரு பெரிய வெற்றிக்காக தொடர்ந்து போராடி வருகிறார் அதர்வா. அவர் தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை.
ஆனால் நயன்தாராவுடன் நடித்த இமைக்கா நொடிகள் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியது. அவர் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடித்த பராசக்தி படம் ரூ. 100 கோடிக்கு மேல் அள்ளியது. ஆனால் அந்த வெற்றியில் அவரால் பங்கு பெற முடியவில்லை அல்லது அந்த வெற்றியை அவருக்கு மட்டுமே உரிமையாளராக சொல்ல முடியவில்லை.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அதர்வா நடித்த இதயம் முரளி படமும் நடிகை சமந்தா நடித்த மா இண்டி பங்காரம் படங்களும் வெளியாகின. இதில் தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் சமந்தா படம் வெளியானது. அந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது. இதனால் ஏகப்பட்ட சந்தோஷத்தில் சமந்தா இருந்து வருகிறார். ஆனால் அதர்வா நடித்த இதயம் முரளி படம் இன்னும் ரூ. 10 கோடியை கூட தாண்ட முடியவில்லை. இந்த படத்துக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது.
ஒரே காலகட்டத்தில் சமந்தாவும் அதர்வாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் இப்போது சமந்தாவின் நிலை வேறு. ஆனால் இன்னமும் அதர்வா ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டே இருக்கிறார். அவர் நடித்த பரதேசி ஈட்டி 100 சண்டி வீரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டாலும் அவரால் அதன்பிறகு பெரிய ஹிட் கொடுக்க முடியவில்லை காலத்திற்கேற்ப கதைகளை தேர்வு செய்வதில் நடிகர் அதர்வா கவனம் செலுத்த வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.





