- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது கூலி திரைப்பட ட்ரெய்லரில் இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறதா... அது மட்டுமல்ல படத்தின் நீளம்...

என்னது கூலி திரைப்பட ட்ரெய்லரில் இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கிறதா… அது மட்டுமல்ல படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா… அடேங்கப்பா…

- Advertisement -

தமிழ் சினிமா தற்போது கூலி வைபிற்கு வந்துவிட்டது என்று கூறலாம். ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். வரும் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் ஆறாவது திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து வெளியான சிக்கிடு மற்றும் மோனிஷா ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட் அடித்தன. இதே போல் அண்மையில் வெளியிடப்பட்ட பவர் ஹவுஸ் பாடலும் பட்டையை கிளப்பியது. படத்திற்கு அனிருத் வேறு லெவலில் பணிபுரிந்து இருப்பது அதன் பாடல்களை கேட்கும் போதே தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த்திற்கு தேவா எனும் கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ரஜினிகாந்தின் நண்பராக வருகிறார் சத்யராஜ். அவரது மகளாக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். இது போக, நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாகீர் உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் வருகிறார். அவர் தாஹா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க வாட்ச்களை மையப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. அது தொடர்பான கடத்தல் பின்னணியை மையமாக வைத்துதான் இதன் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதியிருக்கிறாராம்.

- Advertisement -

ஏற்கனவே அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த லோகேஷ் கனகராஜ், இந்த திரைப்படத்தை பார்த்து முடித்ததும் ரஜினிகாந்த் தன்னை கட்டி அணைத்ததாகவும், தளபதி போல் இருக்கிறது என்று கூறியதாகவும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல நாம் இருவரும் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் பணி புரியலாம் என ரஜினி தெரிவித்ததாகவும் லோகேஷ் குறிப்பிட்டார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் இரண்டாம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

அன்றைய தினம் ட்ரெய்லரும் வெளியாகிறது. ஏற்கனவே லியோ ட்ரைலர் விஜய்யின் வாய்ஸ் ஓவரோடு ஆரம்பிக்கும். விக்ரம் டிரைலரும் அப்படித்தான். இதே போன்றுதான், கூலி முன்னோட்டமும் அமைந்திருப்பதாக சொல்கிறார்கள். இதனிடையே கூலி திரைப்படம் 2 மணி நேரம் ஐம்பது நிமிடம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்