நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்து இருக்கிறார். ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று இரவு நடந்தது.
ஆனால் இந்த விழாவில் படத்தின் நாயகன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவர் தர்மன் படப்பிடிப்புக்காக நேற்று மைசூரில் இருந்தார். அவர் இ்லலாமலேயே இந்த விழா நடந்து முடிந்துள்ளது. பொதுவாக ரஜினிகாந்த் நடித்த படங்களின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடக்கும்.
ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது இணையத்தில் வைரலாகும். ஆனால் இந்த முறை ரஜினிகாந்த் இல்லாமலேயே ஜெயிலர் 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்து முடிந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் தமிழக சட்டசபை இடைத்தேர்தல் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சமயத்தில் ரஜினிகாந்த் எது பேசினாலும் அது பிரச்னையாகி விடும். அவர் சாதாரணமாக சில விஷயங்கள் பேசினாலே அது அரசியலாகி விடுகிறது. அது படத்தின் ரிலீஸுக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம் என்பதால் தான் இந்த விழாவை ரஜினி பங்கேற்காமல் முடித்து விட்டனர். சூழ்நிலையை புரிந்து கொண்டு ரஜினிகாந்த் மைசூரிலேயே இருந்துவிட்டார் என்றும் தெரிய வருகிறது.
தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்று 4 மாதங்கள் ஆன பிறகும் இன்னும் அவரை ரஜினிகாந்த் நேரில் சந்திக்கவில்லை. சம்பிரதாயத்துக்காக அப்படி முக்கிய பதவிகளில் இருப்பவர்களை நேரில் சந்திப்பது தனக்கு பிடிக்காது என்று ஏற்கனவே ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஏனென்றால் இந்த மரியாதை நிமித்த சந்திப்பை ரஜினி தவிர்க்கிறார்.
வழக்கமாக ரஜினி படம் ஆடியோ லான்ச் என்றாலே ரசிகர்களிடையே பெரிய அளவில் வைஃப் இருக்கும். அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது சொல்கிற குட்டி கதை பெரிய அளவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தும். இப்போதைய அரசியல் சூழலில் ஏதேனும் பேசப்போய் அது தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தும் என்பதால் ரஜினிகாந்த் இந்த விழாவை தவிர்த்துள்ளதாக தெரிய வந்துள்ளது.





