- Advertisement -
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படம் வரும் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. படத்தின் டிரெய்லர் தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் கடந்த வாரம் 5ம் தேதி வெளியானது. டிரெய்லர் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. யூடியூப் தளத்தில் தமிழ் டிரெய்லர் 30 மில்லியன் பார்வைகளையும் தெலுங்கு டிரெய்லர் 8.3 மில்லியன் பார்வைகளையும் இந்தி டிரெய்லர் 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மொத்தமாக 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.





