ரஜினிகாந்த் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 10 ஆம் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இதில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, தமன்னா, விநாயகன், சுனில் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ஏற்கனவே இணையத்தில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை போய்க்கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்கள் ஓங்கி ஒலித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் Showcase இன்று மாலை 6 மணிக்கு வெளிவரும் என்று அறிவிப்பு வெளிவந்தது. அதன்படி தற்போது இத்திரைப்படத்தின் அட்டகாசமான Showcase வெளிவந்துள்ளது. இதில் ரஜினிகாந்த் மிகவும் மாஸ் ஆக தென்படுகிறார். அது மட்டுமல்லாது இது வரை நாம் பார்த்திடாத ஒரு புதிய ரஜினிகாந்தை பார்க்கலாம் என்று இந்த Showcase-ந் மூலம் தெரிய வருகிறது. அனிருத்தின் பிஜிஎம் வேற லெவலில் இருக்கிறது. அந்த Showcase வீடியோ இதோ





