- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் குடிபோதையில் கலாட்டா, விநாயகனை கைது செய்த கேரளா போலீஸ் - ஜெயிலர் பட வில்லன்...

மீண்டும் குடிபோதையில் கலாட்டா, விநாயகனை கைது செய்த கேரளா போலீஸ் – ஜெயிலர் பட வில்லன் நடிகரால் போலீசாருக்கு தொடரும் தலைவலி!

- Advertisement -

தமிழில் இயக்குனர் தருண்கோபி இயக்கத்தில் விஷால் நடித்த திமிரு என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் விநாயகன் மிரட்டி இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நடிகர் விநாயகன் அங்கும் பிரபல நடிகராக இருந்து வருகிறார். ஆனால் அடிக்கடி பொது இடங்களில் பிரச்னை செய்து நடிகர் விநாயகன் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். குடிபோதையில் மற்றவர்களிடம் தகராறு செய்து பிரச்னைகளில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. 3 மாதங்களுக்கு ஒரு முறை இப்படி அவர் பிரச்னையில் சிக்குவது தொடர்கதையாக உள்ளது.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன் கோவாவில் ஒரு கடைக்காரரிடம் தகராறு செய்து பிறகு அங்குள்ள போலீசார் நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். 3 மாதங்களுக்கு முன்பு விநாயகன் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் எதிரில் வசிக்கும் நபருடன் தகராறு செய்து அநாகரிகமாக விநாயகன் நடந்து கொண்டார். அதற்குப் பிறகு அவரே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் கடந்து ஒரு வாரமாக கேரளம் மாநிலம் கொல்லம் பகுதியில் நடந்து வரும் ஒரு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு விநாயகன் நடித்தார். அப்போது அங்குள்ள அஞ்சலம்மூடு என்ற ஓட்டலில் அவர் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்தார். நேற்றுடன் சூட்டிங் முடிந்த நிலையில் ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பினார்.

- Advertisement -

அப்படி வெளியே கிளம்பும்போது ஹோட்டல் நிர்வாகிகளுடன் நடிகர் விநாயகன் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் கடும் மதுபோதையில் இருந்திருக்கிறார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரித்த போது அவர்களுக்கும் கட்டுப்படாமல் போலீசாரிடமும் கடும் வாக்குவாதத்தில் விநாயகன் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை ஜாமினில் விடுதலை செய்தனர். ஹோட்டல் நிர்வாகிகளுடன் தகராறு செய்தது மட்டுமின்றி அதை விசாரிக்க வந்த போலீஸ் அதிகாரிகளுடனும் நடிகர் விநாயகன் வாக்குவாதம் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் வில்லன் போலவே நடந்து கொள்ளும் நடிகர் விநாயகனின் நடவடிக்கை குறித்து அவரது ரசிகர்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்