- Advertisement -
Homeபொழுதுபோக்குவீணாகப் போனவர்களே… எப்போது திருந்துவீர்கள்…? - கரூர் துயர சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்...

வீணாகப் போனவர்களே… எப்போது திருந்துவீர்கள்…? – கரூர் துயர சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் கடும் கண்டனம்!

- Advertisement -

நடிகர் சசிக்குமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இசைஞானி இளையராஜா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்புடுத்தியவர். இசையில் அவர் ஞானி என்றாலும் தனி மனிதராக அவரை போன்ற மோசமான ஒருவரை பார்க்க முடியாது என்று பகிரங்கமாக கூறியவர்.

சமீபத்தில் தவெக பொதுக்கூட்டம் கரூரில் நடந்தது. இதில் 41 பேர் பலியாகினர். இதுகுறித்து கரூரில் 41 பேரை பலி கொடுத்த குடும்பத்தினரின் அழுகுரலை கேட்டதுமே நெஞ்சம் பதைபதைக்கும் நிலையில் “We Stand with Vijay” என சில இன்ஃப்ளூயன்சர்கள் திட்டமிட்டு பரப்பி வருவதை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக கண்டித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருப்பதாவது, நேற்று வரை நம்மோடு பேசித் திரிந்த 41 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம்.

குடும்பங்களில் ஒப்பாரி. இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக் கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்க முடியாத விரக்தியில் அமர்ந்திருக்க – “WE STAND WITH VIJAY” என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே! உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்?

- Advertisement -

எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்? ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது? ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டு போய் விடும்? அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்? எதற்காக 40 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைபடுத்தும் அளவிற்கு தரம்தாழ்ந்து போனாய்?

தமிழ்நாட்டை வியந்து பார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்க வைத்து விட்டீர்களே, மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது. உங்கள் வாழ்வு சிறக்காது. அவைகளின் சாபம் உங்களை விரட்டிப் பிடிக்கும். கொடுமையின் உச்சத்தை நீ அனுபவிக்கும் முன் திருந்திவிடு என ஆவேசத்துடன் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார். இவர் தெரிவித்துள்ள இந்த கடும் கண்டனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்