- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜித்துடன் மோதும் விஜய் வில்லன்?.. இது வேற லெவல் சம்பவமாச்சே.. இதோ விடாமுயற்சி பற்றிய லேட்டஸ்...

அஜித்துடன் மோதும் விஜய் வில்லன்?.. இது வேற லெவல் சம்பவமாச்சே.. இதோ விடாமுயற்சி பற்றிய லேட்டஸ் தகவல்

- Advertisement -

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. வங்கி கொள்ளையையும், வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் அடிப்படையாக வைத்து ஹெச்.வினோத் படத்தை இயக்கியிருந்தார். வாரிசு படத்துக்கு போட்டியாக களமிறங்கிய துணிவு படம் இந்த பொங்கல் ரேஸில் வென்றது. இதற்கிடையே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

கோலிவுட்டின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான மகிழ் திருமேனி படத்தை இயக்குவதால் ரசிகரக்ள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கின்றனர். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் ஒன்றாம் தேதி இந்தப் படத்தின் பெயர் வெளியானது. ஆனால் அதற்கு பிறகு படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

- Advertisement -

ஒருபக்கம் அஜித் இரண்டு கட்ட உலக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டார். ஆனாலும் ஷூட்டிங் தொடங்கவில்லை. லைகாவில் நடந்த அமலாக்கத்துறை சோதனைதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று முதலில் கூறப்பட்டது; அதனையடுத்து மகிழ் திருமேனி இன்னமும் கதையை இறுதி செய்யவில்லை என கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட விரக்தி அடைந்திருக்கின்றனர்.

இதற்கிடையே அஜித் தொடர்ந்து தாமதப்படுத்துவதால் இந்தப் படத்தையே ட்ராப் செய்ய லைகா திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் உலாவுகிறது. ஆனால் படத்துக்காக அஜித்திற்கு கணிசமான தொகையை லைகா அட்வான்ஸாக கொடுத்துவிட்டது. எனவே படத்தை ட்ராப் செய்யும் எண்ணமே அந்த நிறுவனத்துக்கு இல்லை என்ற தகவல்களும் வெளியாகின்றன. எனவே அஜித் ரசிகர்கள் இன்னமும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜித்துக்கு வில்லனாக சஞ்சய் தத்தை நடிக்க பேச்சுவார்த்தை நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத் சமீப காலமாக தென்னிந்திய மொழி படங்களில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டிவருகிறார். கேஜிஎஃப் 2 படத்தில் வில்லனாக நடித்திருந்த அவர் விஜய் நடித்திருக்கும் லியோ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவரும் தமன்னாவும்தான் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

- Advertisement -

சற்று முன்