- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்கள் நடிப்பு திறமையை காட்டுவதற்கு இப்படியா வீடியோ எடுத்து அனுப்புவீங்க? - பொங்கி எழுந்த இசையமைப்பாளர்...

உங்கள் நடிப்பு திறமையை காட்டுவதற்கு இப்படியா வீடியோ எடுத்து அனுப்புவீங்க? – பொங்கி எழுந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

- Advertisement -

எந்த விஷயமாக இருந்தாலும், அதில் தனது கருத்துகளை மிக வெளிப்படையாக பேசி வருகிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். துவக்கத்தில் டிவி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன், பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி, பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்தினார். இதில் தமிழ் வார்த்தைகளை கொண்டு ஒரு சொல் ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி பலத்த வரவேற்பை பெற்றது.

செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளாரக இருந்த ஜேம்ஸ் வசந்தன், இயக்குநர் சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். கண்கள் இரண்டால், உன் கண்கள் இரண்டால் என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து மிக கடுமையாக விமர்சித்தும் பேசினார். இளையராஜாவை போல ஒரு மிகச்சிறந்த இசை வல்லமை படைத்த ஞானியை யாருமே பார்க்க முடியாது. இசைத்துறையில் அவரை என் குரு என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். ஆனால் தனிப்பட்ட முறையில் இளையராஜா போல ஒரு மட்டமான ஆளை எங்குமே பார்க்க முடியாது என்றும் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

அதேபோல், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்தும், இரண்டு மாதங்களுக்கு முன் ஜேம்ஸ் வசந்தன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். சிகரட் பிடிக்கும் பெண், வீட்டுக்குள் அத்துமீறி நடந்துக்கொள்ளும் போட்டியாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த டைட்டில் வின்னர் பட்டத்தை தரக்கூடாது. அந்த வகையில் விசித்ராவுக்கு தருவது பெருமையாக இருக்கும் என்றும் பேசியிருந்தார்.

- Advertisement -

இப்போது தனது வலைதள பக்கத்தில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், நடிப்பு திறமையை காட்ட வீடியோ அனுப்பச் சொன்னால் ஏற்கனவே வந்த சினிமா படக்காட்சிகளுக்கு, பாடல்களுக்கு வாயசைத்த ரீல்ஸ் காட்சிகளை பலரும் அனுப்புகிறார்கள். இதில் எப்படி உங்கள் திறமை வெளிப்படும்? இப்படி அனுப்புவது தவறு.

ஒரு படத்தில் பிரபலமான காட்சி எடுத்து, அந்த வசனங்களை சொந்தமாக பேசி நடித்துக்காட்டி அந்த வீடியோவை அனுப்ப வேண்டும். அல்லது ஒரு புதிய காட்சியை உருவாக்கி, அதில் வசனங்கள் பேசி நடித்துக்காட்டி அனுப்புவதே சிறந்தது. இப்படி ரீல்ஸ் வீடியோக்களை யாருக்கும் அனுப்பி, உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகளை நீங்களே கெடுத்துக் கொள்ளாதீர்கள், என ஆவேசமாக ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்