- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் தமிழ்நாடு தியேட்டர்களில் ரிலீஸ் உரிமை யாருக்கு? வெளியான முக்கிய தகவல் - போட்டியில்...

ஜனநாயகன் படம் தமிழ்நாடு தியேட்டர்களில் ரிலீஸ் உரிமை யாருக்கு? வெளியான முக்கிய தகவல் – போட்டியில் ஜெயித்தது அவர்தானா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்து விட்டது. இப்போது அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே படப்பிடிப்பின் போதே பல விஷயங்களை பக்காவாக பிளான் போட்டு இயக்குனர் எச் வினோத் செய்துவிட்டதால் படத்தின் 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.

இருந்த போதிலும் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் 9ம் தேதி பொங்கல் பண்டிகை நாட்களில்தான் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இன்னும் 6 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் இருப்பதால் படம் குறித்த எந்த தகவல்களையும் இப்போதே வெளியிட்டால் சுவாரசியம் போய்விடும் என்பதால் படக்குழு அமைதி காக்கிறது.

- Advertisement -

அதனால் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் செகன்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் படம் சார்ந்த விஷயங்களை படம் ரிலீஸாக ஒரு மாதம் முன்னதாக அவ்வப்போது வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. லியோ தி கோட் படங்கள் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் வெளியீடு செய்ய யாருக்கு உரிமையை தருவது என்பதில் பலத்த சிக்கல் ஏற்பட்டது. ரூ. 100 கோடி விலை நிர்ணயித்த நிலையில் இந்த போட்டியில் இருந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் விலகிக்கொண்டது. இந்த நிறுவனம்தான் விஜய் நடித்த தி கோட் படத்தை தயாரித்திருந்தது.

- Advertisement -

அடுத்து ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்எல் லலித்குமார் ஆகிய இரண்டு பேரில் யாருக்கு ஜனநாயகன் பட உரிமையை தருவது என்பதில் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் ராகுல் லலித்குமார் இருவருமே நடிகர் விஜய்க்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள். நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாருக்கு அந்த வாய்ப்பை தர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துவிட்டதாகவும், இந்த போட்டியில் இருந்து ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெளியேறிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்தவர் எஸ்எஸ் லலித்குமார். மேலும் கோவித் காலகட்டத்தில் வாரிசு படத்தை வினியோகம் செய்தவரும் அவர்தான். எனவே அவருக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்