- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழா… கண்டிப்பாக நடக்குமா? விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவு...

ஜனநாயகன் படம் இசை வெளியீட்டு விழா… கண்டிப்பாக நடக்குமா? விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவு என்ன? – காத்திருக்கும் படக்குழுவினர்!

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இது அவரது 69வது படம். இதுதான் தனது கடைசி படம் என்று ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்துவிட்டார். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல இயக்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஜய் கடந்த ஆண்டிலேயே தி கோட் படத்துக்கு பிறகு ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் ஜனநாயகன் படத்துடன் அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலக இருக்கிறார். ஜனநாயகம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாக உள்ளது. அதே நேரத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா என்பதுதான் ரசிகர்களின் பெரிய கேள்வியாக இருக்கிறது.

- Advertisement -

ஏனென்றால் வழக்கமாக விஜய் படம் என்றாலே இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடப்பது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்கும் நடிகர் விஜய் குட்டிக்கதை சொல்வார். அரசியல் சமூகம் சார்ந்த பல விஷயங்களை சூசகமாக பேசி ரசிகர்களை மகிழ்விப்பார். இப்போது நடிகர் விஜய் சினிமாவை விட்டு முற்றிலும் விலகி இருக்கிறார். மேலும் ஜனநாயகம் படம் தான் அவரது கடைசி படம். அதே நேரத்தில் அரசியல்வாதியாகவும் நடிகர் விஜய் தமிழக அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார்.

அதனால் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தால் அது வேற லெவலில் இருக்கும் என்று தளபதி ரசிகர்களும் தவெக கட்சியினரும் தொண்டர்களும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

ஆளுங்கட்சி திமுகவின் இடையூறுகளாலும் நெருக்கடியாலும் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று மீண்டும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக அடுத்து நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று நடிகர் விஜயே மறுத்துவிட்டார். அதனால் லியோ தி கோட் ஆகிய படங்களின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை.

இந்நிலையில் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடத்தப்படுமா என்பது கேள்வியாக உள்ளது. ஆனால் ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என படக்குழு ஆசைப்படுகிறது. அனிருத்தும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு வர ஓகே கூறியிருக்கிறார். ஆனால் விழாவுக்கு ஆளுங்கட்சி தரப்பில் பிரச்னைகள் வருமா, அதனால் படத்தின் ரிலீஸூக்கு பாதிப்பு வருமா என்றும் விஜய் தரப்பில் யோசிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் விஜயை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

- Advertisement -

சற்று முன்