- Advertisement -
Homeபொழுதுபோக்கு34 ஆண்டுக்கு பின் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறார் கேப்டன் பிரபாகரன் - போடு வெடிய…...

34 ஆண்டுக்கு பின் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறார் கேப்டன் பிரபாகரன் – போடு வெடிய… விஜயகாந்த் ரசிகர்கள் உற்சாகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் என்றென்றும் மறக்க முடியாத ஒரு கலைஞர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த மனிதராக நல்ல பண்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். பிறருக்கு உதவி செய்வதையே தனது வாழ்க்கையின் லட்சியமாக கொண்டவர். குறிப்பாக பசியோடு வந்தவர்களின் பசியை போக்கியவர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்சத்திர நடிகர் முதல் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவை வழங்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அதை தனது ஷூட்டிங் ஸ்பாட்டில் கட்டாயமாக்கியவர் விஜயகாந்த். அதற்காக தனது சம்பளத்தில் பல கோடிகளை தயாரிப்பாளருக்கு ஒதுக்கித் தந்தவர் என்பதும் உண்மை.

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நடிகராக மட்டுமின்றி தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் தமிழ்நாட்டில் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர். கடந்த 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் ரஜினிகாந்துக்கு அடுத்த நிலையில் வெற்றிப் படங்களை கொடுத்த விஜயகாந்த் நடித்த 100வது படம் கேப்டன் பிரபாகரன். ஆர்கே செல்வமணி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜயகாந்த் சரத்குமார் ரூபிணி ரம்யா கிருஷ்ணன் லிவிங்ஸ்டன் காந்திமதி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

- Advertisement -

சந்தன கடத்தல் வீரப்பன் கதையை மையப்படுத்திய இந்த படத்தில், வீரபத்ரன் என்ற கேரக்டரில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்திருந்தார். அதுவரை டான்ஸராக அடியாளாக நடித்து வந்த மன்சூர் அலிகானின் திரை பயணத்தில் இது ஒரு முக்கிய படமாக அமைந்தது. கேப்டன் பிரபாகரன் மிகப்பெரிய வெற்றிப் படமாகும்.

கடந்த 1991ம் ஆண்டில் கேப்டன் பிரபாகரன் படம் வெளியாகி 34 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் கேப்டன் பிரபாகரன் படம் திரைக்கு வருகிறது. 4கே டிஜிட்டல் தொழில்நுட்ப தரத்தில் முருகன் பிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய உள்ளார். 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் கேப்டன் பிரபாகரன் மீண்டும் ரசிகர்களை சந்திக்க விரைவில் வருகிறார்.

- Advertisement -

சற்று முன்