- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்காக காத்திருக்கும் பிரம்மாண்டம்... அதிலும் வேறு ஒரு சஸ்பென்ஸ்க்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும்...

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்காக காத்திருக்கும் பிரம்மாண்டம்… அதிலும் வேறு ஒரு சஸ்பென்ஸ்க்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தயார்படுத்தும் படக்குழு…

- Advertisement -

ஜனநாயகன் விஜயின் கடைசி திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் விஜய். இப்படியான சூழலில், இப்போதைக்கு ஜனநாயகன் திரைப்படம் அவரது கடைசி காவியம் என்று கூறப்பட்டிருப்பதால் அதன் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஹெச் வினோத் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகியாக வருகிறார் பூஜா ஹெக்டே. மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த, மமீதா பைஜூவுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோக பிரியாமணியும் படத்தில் வருகிறார்.

- Advertisement -

பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய நரேன், ஜனநாயகன் திரைப்படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பதாகவும், சிறிய நேரத்தில் வந்தாலும் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

அனிருத் இசையமைத்திற்கும் இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், சென்னையை அடுத்த பையனூர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது. அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்பதற்கு ஏதுவாகவே சென்னையில் சூட்டிங்கை நடத்தினார்கள். இதுபோக, கொடைக்கானலிலும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டன. படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வருகிறார் விஜய்.

- Advertisement -

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் கேமியோ ரோலில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அரசியல்வாதி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதேபோல இயக்குனர் அட்லி நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பத்திரிகையாளர் கதாபாத்திரத்தில் சிறிய ரோலில் வருவதாக பேசப்படுகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் இல்லாமல் மலேசியாவில் நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் அஜித் குமார் உள்ளிட்ட மூத்த நடிகர்களை கலந்து கொள்ள வைக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்