- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் ஒருமுறை தளபதி ஆட்டத்தை பார்க்கலாமா? நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் -...

மீண்டும் ஒருமுறை தளபதி ஆட்டத்தை பார்க்கலாமா? நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படம் – ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

- Advertisement -

இன்றைய தமிழக முதல்வர் முன்னாள் திரைப்பட நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்த படம் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி வெளியானது. இந்த படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியதாக கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வமான வசூல் விவரங்களை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

தைப் பொங்கல் பண்டியை முன்னிட்டு கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற வழக்கு விசாரணை அதன்பிறகு வழக்கு வாபஸ் என கடந்து கடந்த மாதம் தான் இந்த படம் வெளியானது.

- Advertisement -

ஏறக்குறைய ஆறு மாதங்களாக ஜனநாயகன் படம் திரைக்கு வராமல் பல விதமான போராட்டங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே இணையத்திலும் லீக் செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் படம் வெளியான பிறகு தியேட்டர்களில் வசூலில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதேபோல் இந்த படத்துக்கு சென்சார் போர்டு தரப்பில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் ஃபேமிலி ஆடியன்ஸ் குறிப்பாக 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தியேட்டர்களில் எதிர்பார்த்த கூட்டமும் வரவில்லை.

- Advertisement -

பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்திருந்தது. எனினும் 300 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூலை கடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஜனநாயகன் படம் வரும் 21ம் தேதி அதாவது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அன்று ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதை ஜி5 ஓடிடி தளம் அதற்கான முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் நாளை மறுதினம் 21ம் தேதி ஜனநாயகன் படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியேட்டரில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் ஓடிடியில் பெரிய வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

சற்று முன்