- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போது ரஜினிக்கு போட்டியாக இருந்தவர் கமல் அல்ல, அந்த ஹீரோ தான் - 1987ல் நடந்த...

அப்போது ரஜினிக்கு போட்டியாக இருந்தவர் கமல் அல்ல, அந்த ஹீரோ தான் – 1987ல் நடந்த வேற லெவல் சம்பவம் – இது புது தகவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு போட்டியாக பார்க்கப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் அது 1987ம் ஆண்டுக்கு பிறகு அப்படியே மாறிவிட்டது. கமல் சிறந்த நடிகர் நல்ல திறமைசாலி என்றாலும் அவருக்கான ரசிகர்கள் ஏ சென்டர் ஏரியாக்களில் மட்டுமே அதிகமாக இருந்தனர். 1987ம் ஆண்டுக்கு பிறகு விஜயகாந்தின் அபார வளர்ச்சி பி மற்றும் சி சென்டர் ஏரியாக்களில் மிகப்பெரிய அளவில் இருந்தது. அதனால் ரஜினிக்கும் விஜயகாந்துக்கும் மறைமுகமாக பெரிய போட்டியே நடந்தது. இந்த பி மற்றும் சி ஏரியாக்களில் பலமுறை விஜயகாந்த் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார் அல்லது ரஜினி படங்களுக்கு கடும் போட்டியாளராக இருந்திருக்கிறார். குறிப்பாக சின்ன கவுண்டர் – மன்னன், உழவன் மகன் – மனிதன், வைதேகி காத்திருந்தாள் – நல்லவனுக்கு நல்லவன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணமாக சொல்லப்படுகிறது.

சற்று முன்