- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ், தேதியில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் - தளபதி...

விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ், தேதியில் செய்யப்பட்ட திடீர் மாற்றம் – தளபதி ரசிகர்களுக்கு இது சந்தோஷமாக தகவல்தான்!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 6 மாதங்கள் இழுபறிக்கு பிறகு இப்போது திரைக்கு வரும் என்பது உறுதியாகி விட்டது. இது விஜய் நடித்த கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் காணப்படுகிறது. அதே நேரத்தில் இந்த படம் 3 மாதங்களுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எப்படியிருப்பினும் ஜனநாயகன் படத்தை திரையில்தான் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ள தளபதி ரசிகர்கள் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சென்சார் போர்டு ஜனநாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் வரும் 24ம் தேதி படம் ரிலீஸ் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் ரிலீஸ் செய்யவே படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனால் இயக்குனர் எச் வினோத் இதற்கு சம்மதிக்கவில்லை. ஏற்கனவே பல பிரச்னைகளால் 6 மாதங்கள் கழித்து இந்த படம் திரைக்கு வருகிறது.

இன்னும் படத்தை விளம்பரப்படுத்தவும் மற்ற சில காரணங்களுக்காகவும் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பது நமக்கு இன்னும் சிக்கலை ஏற்படுத்தி விடலாம். இன்னும் யாரேனும் படத்துக்கு எதிராக பிரச்னைகளை உண்டு பண்ணலாம். அதனால் மிக விரைவில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கறாராக பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதன்பிறகுதான் வருகிற 24ம் தேதி ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக வருகிற 24ம் தேதி பதிலாக ஒருநாள் முன்னதாக வருகிற 23ம் தேதியே ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதனால் 23ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் ஜனநாயகன் படம் ரிலீஸாகிறது.

ஆனால் ஓவர்சீஸ் பெற்ற வெளிநாடுகளில் 23ம் தேதி வரை மற்ற படங்களுக்கு அனுமதி தந்துள்ளதால் 24ம் தேதி ரிலீஸ் என முதல் நாள் என்று முன்பதிவு நடந்து வருகிறது. அதனால் வெளிநாடுகளில் மட்டும் ஜனநாயகன் படம் மறுநாள் 24ம் தேதி ரிலீஸ் செய்யப்படும். மற்றபடி தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் 23ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்படுவது உறுதி என்று லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்