- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தா் சி வடிவேலு காம்போ காமெடி படம் - 2 நாட்களில் கேங்கர்ஸ் வசூல் நிலவரம்...

சுந்தா் சி வடிவேலு காம்போ காமெடி படம் – 2 நாட்களில் கேங்கர்ஸ் வசூல் நிலவரம் எவ்வளவு? சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான சில படங்களில் வடிவேலு காமெடி காட்சிகள் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக வின்னர் ரெண்டு கிரி லண்டன் போன்ற படங்களில் கைப்புள்ள மேஜிக் ஷோ கிரிகாலன் பேக்கரி ஓனர் வீரபாகு வக்கீல் வெடிமுத்து போன்ற கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது.

அதே போல் சுந்தர் சியுடன் இணைந்து வடிவேலு காமெடி செய்த படங்களும் பெரிய அளவில் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. குறிப்பாக தலைநகரம் படத்தில் நாய் சேகர் நகரம் மறுபக்கம் படத்தில் அலர்ட் மணி போன்ற கேரக்டர்களில் இருவரும் காமெடி செய்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தனர்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14 ஆண்டுகளாக இருவரும் மீண்டும் ஒன்று சேரவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவில்லை. குஷ்பு பலமுறை முயற்சித்தும் வடிவேலு சுந்தர் சியுடன் இணைய மறுத்து விட்டார். இப்போது மீண்டும் சுந்தர் சி வடிவேலு காம்போவில் கேங்கர்ஸ் என்ற படம் வெளியாகி உள்ளது.

கேங்கர்ஸ் படத்தில் சுந்தர் சி கேத்தரின் தெரசா வாணிபோஜன் வடிவேலு மைம் கோபி அருள்தாஸ் சந்தானபாரதி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 24ம் தேதி வெளியான நிலையில் நடிகர் வடிவேலு இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து விட்டார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஒரு தரப்பினர் அப்படி ஒன்றும் சிரிப்பு காட்சிகள் இல்லை என்றும் விமர்சிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி விட்ட வடிவேலு பிறகு நடிக்க வந்த நிலையில் மாமன்னன் படத்தில் மட்டுமே அவரது குணச்சித்திர நடிப்பு ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சந்திரமுகி 2 நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் சிவலிங்கா வம்பு சண்ட போன்ற படங்களில் வடிவேலு நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை ஈரக்கவில்லை.

இந்த சூழலில் கேங்கர்ஸ் படம் நடிகர் வடிவேலு காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகியிருப்பதாக ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே இந்த படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் 2ம் நாளில் 4.2 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. வாரத்தின் இறுதி நாட்களான சனி ஞாயிறு தினங்களில் கேங்கர்ஸ் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்