- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் 26ல் ஜனநாயகன் படம் ரிலீஸ்? ஏகப்பட்ட இடங்களில் கட் போட்ட சென்சார், கொத்து பரோட்டா...

வரும் 26ல் ஜனநாயகன் படம் ரிலீஸ்? ஏகப்பட்ட இடங்களில் கட் போட்ட சென்சார், கொத்து பரோட்டா ஆனதா ஜனநாயகன்? – வசனங்கள் வன்முறை காட்சிகள் டெலீட்!

- Advertisement -

நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன் வரும் 26ம் தேதி ரிலீஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் விஜயின் கடைசி படம் என்பதால் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. 6 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கிக் கிடந்த ஜனநாயகன் படம் வருகிற 26ம் தேதி திரைக்கு வரலாம் என்றும் தகவல் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் அதிகாரபூர்வமான தணிக்கை சான்றிதழ் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அதாவது அடல்ட்ஸ் ஒன்லி சான்றிதழ் வழங்கி உள்ளது. மேலும் படத்தில் இடம்பெற்ற அரசியல் சார்ந்த வசனங்கள் மத ரீதியான வார்த்தைகள் மற்றும் வன்முறை காட்சிகளுக்கு சென்சார் போர்டு அதிகாரிகள் குழு அதிரடியாக கத்திரி போட்டுள்ளது. கடந்த 9ம் தேதி வெளியாகியுள்ள இந்த தணிக்கை சான்றிதழில் உள்ள முழுமையான விவரங்கள் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

நடிகர் விஜயின் அரசியல் கட்சியான டிவிகே – தமிழக வெற்றிக் கழகம் பெயரை குறிக்கும் வகையிலான வசனங்கள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அம்பேத்கர் சட்டம் டூ டிவிகே சட்டம் என்ற வசனம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும் படம் முழுவதும் ஆடியோ மற்றும் வீடியோவில் இடம் பெற்ற டிவிகே என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டுள்ளது. படத்தில் ஒரு புத்தகத்தில் அட்டைப்படத்தில் இடம் பெற்றிருந்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படத்தில் இடம்பெற்ற பல மதங்கள் மற்றும் அரசியல் ரீதியான வார்த்தைகளை தணிக்கை குழு மியூட் செய்துள்ளது. அதன்படி பாகவதம் ரங்கநாதர் ஓம் நியூ இந்தியா மற்றும் சிலுவையில் ஆகிய வார்த்தைகள் ஒலிக்காதவாறு மியூட் செய்யப்பட்டுள்ளது. குழந்தை எரிக்கப்படுவது போன்ற 16 வினாடிகள் கொண்ட கொடூரமான வன்முறை காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக மாற்றுக் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்திய தேசியக்கொடி தரையில் விழுவது போன்ற காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலக சின்னத்தின் முத்திரை அவமதிக்கப்படுவது போன்ற காட்சி மாற்றப்பட்டுள்ளது. இவைதவிர சர்ச்சைக்குரிய வசனங்கள் மற்றும் கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஷீலா ராணி என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர் மாற்றப்பட்டுள்ளது. தணிக்கை குழுவின் இந்த நடவடிக்கையின் மூலம் படத்தில் மொத்தம் 20 வினாடிகள் அளவிலான காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

மேலும் 10 வினாடிகள் அளவிலான காட்சிகளுக்கு புதிதாக மாற்றுக் காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் மாற்றங்களுக்கு பிறகு ஜனநாயகன் திரைப்படத்தின் மொத்த நீளம் திரையில் ஓடும் நேரம் 183 நிமிடங்கள் அதாவது 3 மணி நேரம் மூன்று நிமிடங்கள் என சென்சார் போர்டு அதிகாரப்பூர்வமாக சான்றிதழ் வழங்கியுள்ளது. டிவிகே கட்சியின் பெயர் மற்றும் வன்முறை காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ள இந்த சென்சார் அறிக்கை தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்