- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகனில் இருந்து வெளியாகும் முதல் பாடலுக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்களா... கேள்வி பட்டதும் ...

ஜனநாயகனில் இருந்து வெளியாகும் முதல் பாடலுக்கு இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்களா… கேள்வி பட்டதும் நெகிழ்ந்து போய் இருக்கும் விஜய் ரசிகர்கள்…

- Advertisement -

விஜயின் 69 ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது ஜனநாயகன். அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் விஜய், தனது கடைசி திரைப்படம் இதுதான் என்று கூறிவிட்டார். இதனால் அதன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார்.

சென்னையை அடுத்த பையனூரில் இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை செட் போட்டு படமாக்கி இருக்கிறார்கள். அரசியலில் விஜய் கவனம் செலுத்தி வருவதால் அவர் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல முடியாது என்ற காரணத்திற்காக பையனூரிலேயே படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில காட்சிகளுக்காக மட்டும் கொடைக்கானலுக்கு சென்று படமாக்கினார்கள்.

- Advertisement -

படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிமல் மற்றும் கங்குவா திரைப்படங்களில் வில்லனாக மிரட்டிய பாபி தியோல் இதிலும் விஜய்க்கு வில்லனாக வருகிறார். இதுபோக கௌதம் மேனன் பிரகாஷ்ராஜ் மம்தா பைஜூ பிரியாமணி நரேன் என மிகப் பெரிய கூட்டணியே இணைந்திருக்கிறது.

அரசியலை மையப்படுத்தியே இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக வருவதாகவும் சிலர் கூறுகிறார்கள். எச் வினோத், இதற்கு முன்பாக கமல்ஹாசன் உடன் இணைவதாகத்தான் இருந்தது. அரசியல் கதையாக இது உருவாக இருப்பதாக கூறினார்கள்.

- Advertisement -

ஆனால் திடீரென இந்த திட்டம் கைவிடப்பட்டது. அதேசமயம் இந்த கதையைதான் விஜய்க்கு வினோத் கூறியதாகவும் தற்போது அது படமாக்கப்பட்டு வருவதாகவும் பேசிக்கொள்கிறார்கள். அதேபோல அரசியல் கலந்த பஞ்ச் டயலாக்குகள் படத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு படத்தில் இருந்து முதல் அப்டேட் வெளியாகிறது.

இப்படியான சூழலில் அனிருத், ஜனநாயகன் திரைப்படத்திலிருந்து முதல் பாடலை தயார் செய்து விட்டதாக தகவல் கசிந்து இருக்கிறது. விஜயின் கடைசி திரைப்படம் இது என்பதால் பாடலுக்கு தி லாஸ்ட் டான்ஸ் என பெயர் வைத்திருக்கிறார்களாம். அது மட்டுமல்ல விஜயின் முந்தைய திரைப்படங்களில் இடம் பெற்ற அத்தனை குத்துப் பாடல்களின் வரிகளும் இதில் இடம்பெறலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்