நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் ஆகஸ்ட் பத்தாம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு படம் உருவாகியிருக்கிறது. முக்கியமாக ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமாருக்கு இந்தப் படம் வாழ்வா சாவா நிலைமை என்றே கருதப்படுகிறது. படம் வென்றுவிட்டால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற பேச்சுக்கு முட்டுக்கட்டையை ரஜினி போடலாம். அதேபோல் தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நெல்சன் நிரூபிக்கலாம்.
படத்தின் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்டாகியுள்ளன. அதேபோல் கடந்த இரண்டாம் தேதி வெளியான ட்ரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ட்ரெய்லரில் ரஜினிக்கான ஆக்ஷன் ப்ளஸ் மாஸ் காட்சிகள், நெல்சன் திலீப்குமாரின் ஸ்டைலில் டார்க் காமெடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ட்ரெய்லரே ட்ரீட்டாக இருந்தது எனவே படம் முழுக்க முழுக்க கொண்டாட்டமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.
இதற்கிடையே கடந்த மாதம் நடந்த ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், குடிப்பழக்கத்தை மட்டும் விட்டுவிடுங்கள். நான் மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் இப்போ உள்ள ரஜினிகாந்த் எல்லாம் சும்மா. இதைவிட பெரிய இடத்துக்கு போயிருப்பேன். குடியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தினமும் குடிக்காதீர்கள். அதன் காரணமாக வீட்டில் இருக்கும் நிம்மதி போய்விடும் என அட்வைஸ் செய்தார். அதனை கேட்ட ரசிகர்கள் எங்கள் தலைவரை பாருங்கள் ரசிகர்கள் மேல் எவ்வளவு அக்கறையோடு இருக்கிறார் என சிலாகித்தனர்.
அதேசமயம் ரஜினி அவ்வாறு பேசிய அந்த அரங்கத்தில் அன்றைய தினமே மது சப்ளை செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. அதனை பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் மது விவகாரத்தை வைத்து மீண்டும் ரஜினியை வம்பிழுத்திருக்கிறார் அவர். ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கா, பருந்து கதையை ரஜினி சொன்னதிலிருந்து அவரை பருந்து என்றே மாறன் குறிப்பிட்டுவருகிறார்.
இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஊருக்கு உபதேசம். பார்ல சகவாசம் தயவு செஞ்சி கேட்டுக்கறேன். யாரும் சரக்கு அடிக்க வேண்டாம்’ என்று சமீப காலமாக அறிவுரை சொல்லி வருகிறது பவ்யமான பருந்து. ஆனால் நிஜத்தில்… பருந்து செய்திருக்கும் செயலென்ன தெரியுமா? தலைநகரில் உள்ள நுங்குபாக்கம் பகுதியில் உள்ள பிரபல ‘பனை தோப்பு’ ஹோட்டலுக்கு அருகே பருந்திற்கு சொந்தமாக ஒரு ஹோட்டல் இருந்தது. அதற்கு 97 இல் வெளியான தனது படத்தின் பெயரை சூட்டியிருந்தது பருந்து.
ஊருக்கு உபதேசம். பார்ல சகவாசம்:
* 'தயவு செஞ்சி கேட்டுக்கறேன். யாரும் சரக்கு அடிக்க வேண்டாம்' என்று சமீப காலமாக அறிவுரை சொல்லி வருகிறது பவ்யமான பருந்து.
* ஆனால் நிஜத்தில்… பருந்து செய்திருக்கும் செயலென்ன தெரியுமா? தலைநகரில் உள்ள நுங்குபாக்கம் பகுதியில் உள்ள பிரபல 'பனை தோப்பு'… pic.twitter.com/TkVHgdyU4b
— Blue Sattai Maran (@tamiltalkies) August 5, 2023
தற்போது அதை மெயின்டெயின் செய்ய இயலாத காரணத்தால் இன்னொரு க்ரூப்பிற்கு கைமாற்றி உள்ளது. அங்கே தற்போது இருப்பது நூலகமோ, இலவச மருத்துவமனையோ இல்லை. பல மதுப்பிரியர்கள் வந்து செல்லும் Bar என்பதுதான் ஹைலைட். ஊருக்கு உபதேசம். ஆனால் தன் இடத்தில் பாருக்கு அனுமதி. பார்த்தீர்களா பருந்தின் இரட்டை வேடத்தை” என குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்படி தெரியும். நீங்கள் அந்த பாருக்கு அடிக்கடி குடிக்கப்போவீர்களோ என பதிலடியும் கொடுத்துவருகின்றனர்.





