இந்திய சினிமா துறையில் தளபதி விஜய் ஆகப்பெரும் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார். அவரது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால், அது திருவிழா கோலம்தான். விமர்சனத்தை எல்லாம் தாண்டி அவரது திரைப்படம் திரையரங்கு விநியோகஸ்தர்களுக்கு லாபத்தையே கொடுத்து வருகிறது.
இப்படியான சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கே தான் ஒரு ட்விஸ்ட்டும் வைக்கப்பட்டது. தந்தையைப் போல் நடிகராகவேன் என்று சொல்லாமல் நேரடியாக இயக்குனராக களம் இறங்கினார் ஜேசன் சஞ்சய்.
ஜேசன் சஞ்சய் ஏற்கனவே வெளிநாடுகளில் திரைத்துறை தொடர்பான படிப்பையே மேற்கொண்டவர். ஒரு திரைக்கதையை எப்படி எழுத வேண்டும் என்பதை கற்றுத் தேர்ந்தவர். தனது நண்பர்களோடு சேர்ந்து சிறு குறும்படங்களையும் அவர் இயக்கி இருக்கிறார். இப்படியான சூழலில்தான் அவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார்.
லைக்கா நிறுவனம் அவரது திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்போடு சரி அதற்கு அடுத்து இந்த திரைப்படம் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் முடங்கி கிடந்தது. சஞ்சய் திரைப்படத்தில் யார் கதாநாயகனாக நடிக்கப் போகிறார், அதன் கதைகளும் என்னவாக இருக்கும் என்று தொடர்ந்து இணையத்தின் கேள்வி கேட்டு வந்தாலும் அதற்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
பெரும்பாலும் அவரது திரைப்படத்தில், கவின் அல்லது துருவ் விக்ரம் நடிக்கலாம் என்று கூறி வந்தார்கள். இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் திரைப்படத்தில் கதாநாயகனாக வந்தார் சந்தீப் கிஷன். ஆக்சன் தளத்தில் இந்தப் படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. தமன் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
சென்னை இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது பாங்காக் பகுதியில் அதன் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலேயே அதன் சூட்டிங்கை முடித்து ஜேசன் சஞ்சய் பாராட்டைப் பெற்று இருக்கிறார்.





