- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது அவர் நடிக்க வேண்டிய படம், ஆனால் கடைசில அட்லீ இப்படி பண்ணிட்டாரே- கடுப்பில் பேசிய...

இது அவர் நடிக்க வேண்டிய படம், ஆனால் கடைசில அட்லீ இப்படி பண்ணிட்டாரே- கடுப்பில் பேசிய மூத்த பத்திரிக்கையாளர்

- Advertisement -

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த “ஜவான்” திரைப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகியுள்ளது. வட இந்திய ரசிகர்களிடையே “ஜவான்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தென்னிந்திய ரசிகர்களிடையே நல்ல கலவையான விமர்சனங்களே வருகின்றன.

“ஜவான்” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக வெளிவந்துள்ளது. ஷாருக்கான் மிகவும் மாஸ் ஆக இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும்படி இருந்ததாகவும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

முதல் பாதி மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் சலிப்புத் தட்டுவதாகவும் விமர்சனங்கள் வருகின்றன. அட்லீ தனது வழக்கமான திரைக்கதை பாணியை பயன்படுத்தி உள்ளார் எனவும் சமூகத்தில் நடந்த பல உண்மை சம்பவங்களை திரைக்கதையில் இணைத்துள்ளார் எனவும் படம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் “ஜவான்” திரைப்படத்தை ரிவ்யூ செய்த வலைப்பேச்சு குழுவினர், இத்திரைப்படம் குறித்த பல விஷயங்களை பேசியுள்ளனர்.”விஜய்க்கு சொல்ல வேண்டிய கதையை அட்லீ கொண்டுப்போய் ஷாருக்கானிடம் கொடுத்திருக்கிறார். இந்த படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நாம் அட்லீ படம் பார்க்கிறோமா இல்லை ஷங்கர் படம் பார்க்கிறோமா என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது.

- Advertisement -

என்னென்ன விஷயங்கள் நாட்டில் பரபரப்பாக நடக்கிறதோ என்னென்ன விஷயங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ அதனை வைத்து ஷங்கர் திரைக்கதையை அமைப்பார். அதனை அட்லீ சரியாக இத்திரைப்படத்தில் செய்திருக்கிறார்.

நாட்டை உலுக்கிய பல விஷயங்கள் இதில் இருக்கிறது. சம கால அரசியலை பேசும் திரைப்படமாக ஜவான் அமைந்திருக்கிறது. அதே போல் எதுவும் துருத்திக்கொண்டு தெரியவில்லை என்பதுதான் இதில் முக்கியமான விஷயம்” என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்