- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமியாரால் மருமகனுக்கு வந்த புது சிக்கல் - சைரன் 108 படத்தில் நடிச்சதுக்கு இப்படி ஒரு...

மாமியாரால் மருமகனுக்கு வந்த புது சிக்கல் – சைரன் 108 படத்தில் நடிச்சதுக்கு இப்படி ஒரு வில்லங்கமான நிபந்தனையா? – அப்செட் ஆன நடிகர் ஜெயம் ரவி

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த பல ஆண்டுகளாகவே பெரிய வெற்றிப் படங்கள் இல்லை. தனி ஒருவன், போகன், சந்தோஷ் சுப்ரமணியம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தீபாவளி போன்ற ஹிட் படங்களை தர அவரால் முடியவில்லை. அவர் பெரிய அளவில் எதிர்பார்த்த அகிலன், இறைவன் படங்களும் பிளாப் ஆகின.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் சைரன் 108 படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை முதலில் ரெட்ஜெயின்ட் மூவீஸ் வெளியிட இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்குவதால், அந்த நிறுவனம் சார்ந்த செண்பகமூர்த்தி என்பவர் மூலம், அவரது சொந்த பேனரில் அந்த படம் வெளியிடப்படுகிறது.

- Advertisement -

ரெட்ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தை பொறுத்த வரை, படங்களை ரிலீஸ் செய்து அதில் வரும் மொத்த வசூலில், தங்களது கமிஷனை எடுத்துக்கொண்டு மீதி தொகையை தயாரிப்பாளர்களுக்கு திருப்பி கொடுத்து விடுவர். இதுதான் வழக்கம். இதற்கு ப்ரீ டிஸ்ட்ரிப்யூசன் என்று பெயர். அதே முறையில் சைரன் 108 படம் வெளியிட முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், இதற்கு சம்மதிக்கவில்லை. இவர் அந்த படத்தின் ஹீரோ நடிகர் ஜெயம் ரவியின் மாமியார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எங்களுக்கு நிறைய கமிட்மென்ட்ஸ் இருப்பதால் ரூ. 15 கோடி அட்வான்ஸ் கொடுக்குமாறு அவர் கேட்ட நிலையில், ஒரு முக்கிய நிபந்தனையுடன் ரூ. 10 கோடி தர முடிவானது.

- Advertisement -

அதாவது இப்போது ரெட் ஜெயின்ட் மூவி தயாரிக்கும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவிக்கு ரூ. 18 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ. 7 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. மீதி 11 கோடி ரூபாய் தரப்பட வேண்டும். அந்த படத்தில் இப்போது ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

இந்த சூழலில், சைரன் 108 படம் சரியாக ஓடாத பட்சத்தில் இந்த படத்துக்காக ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் வாங்கும் 10 கோடி ரூபாயில், ஜெயம் ரவிக்கு ரெட் ஜெயின்ட் நிறுவனம் தர வேண்டிய மீதி சம்பளத்தில் கழித்துக்கொள்ளப்படும் என செண்பகமூர்த்தி நிபந்தனை விதித்துள்ளார். இதையறிந்த நடிகர் ஜெயம் ரவி, மாமியார் தயாரிக்கிற சைரன் 108 படத்தில் நடித்ததால் இப்படி ஒரு வில்லங்கம் வந்துவிட்டதே என பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்