- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலரே பரவாயில்லை போல.. லியோவுக்கு ஏற்படப்போகும் உச்சக்கட்ட சோகம்?.. ரசிகர்கள் ஏமாற்றம்.. இப்படி நடந்தா என்ன...

ஜெயிலரே பரவாயில்லை போல.. லியோவுக்கு ஏற்படப்போகும் உச்சக்கட்ட சோகம்?.. ரசிகர்கள் ஏமாற்றம்.. இப்படி நடந்தா என்ன ஆகுறது?

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இந்தப் படம் மீது பெரிய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ஏனெனில் இதற்கு முன்னதாக அவரது நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை. மாறாக கடுமையான ட்ரோலுக்கு உள்ளாகின.

எனவே விஜய்க்கு இப்போது ஒரு ஹிட் தேவைப்படுகிறது. ஆனால் லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதால் கண்டிப்பாக மெகா ஹிட் உறுதி என்று இப்போதே பேச ஆரம்பித்திருக்கின்றனர் ரசிகர்கள். மேலும் ஜெயிலர் வெற்றியின் மூலம் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துவிட்டார் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்க அந்தப் படத்தின் வசூல் ரெக்கார்டை லியோ அடித்து நொறுக்கும் எனவும் தளபதி ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

- Advertisement -

படத்தின் மெயின் வில்லனாக சஞ்சய் தத் நடித்திருக்கிறார். அவரைத் தவிர்த்து அர்ஜுனும் நடிக்கிறார். இரண்டு பேரும்தான் படத்தின் வில்லன்களாக இருப்பார்கள் என்று தெரிகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்றும் அதற்கு முன்னதாகவே ட்ரெய்லர் வெளியாகிவிடும் என்றும் சமீப காலமாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் இருந்து விஜய் நேற்று முன் தினம் சென்னை திரும்பியிருக்கிறார். எனவே இன்னும் ஒரு சில தினங்களில் தனக்கான டப்பிங் போர்ஷனை அவர் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் லியோ படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேயிருக்கும் விஷயம் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

- Advertisement -

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘விஜய் நடித்திருக்கும் லியோ படத்துக்கு ஸ்பெஷல் ஷோ அனுமதி கிடைக்காது. அதாவது காலை 9 மணி காட்சிக்கான அனுமதி கிடைப்பது ரொம்பவே கடினம்.அதனால் விதிமுறைகளின்படி காலை 11 மணி ஷோதான் திரையிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என கூறியுள்ளார். அதேசமயம் தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் அதுவும் கேரளாவில் 1.30 மணிக்கு அதிகாலை காட்சி திரையிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொங்கலுக்கு துணிவு படமும் வாரிசு படமும் ஒன்றாக களமிறங்கின. அப்போது அதிகாலை காட்சியில் ஒரு அஜித் ரசிகர் உயிரிழந்தார். அதனையடுத்து தமிழ்நாட்டில் எந்தப் படத்துக்கும் அதிகாலை காட்சிக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை. ஜெயிலருக்கும் அதிகாலை காட்சி இல்லை. ஆனால் லியோவுக்கு 9 மணி காட்சிக்கூட இல்லை என்று தகவல் வெளியாகியிருப்பதால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்