தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தில் தொடங்கி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, தனி ஒருவன் உள்ளிட்ட பல தரமான வெற்றிகளை இவர் கொடுத்திருக்கிறார். படங்களைக் கச்சிதமாக தேர்வு செய்து அதை வெற்றிப்படமாக மாற்றும் சூட்சுமம் தெரிந்திருப்பதால் ஜெயம் ரவிக்கு என தனி ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் உள்ளது.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இதில், விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், ஜெயம் ரவியின் நடிப்பு தனியாக தெரிந்தது.
அரசருக்கே உண்டான மிடுக்கான தோரணை மற்றும் தெளிவான தமிழ் உச்சரிப்பின் மூலம் பொன்னியின் செல்வன் படத்தில் பலரையும் கவர்ந்தார் ஜெயம் ரவி. இதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம், வந்த தடம் தெரியாமல் போனது. இருப்பினும் ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

புதுமுக இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்னும் படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அஜித்தைப் போல ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிங் நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல், சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய ராஜேஷ் உடனும் ஜெயம் ரவி இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதில் பிரியங்கா மோகன் கதாநாயகன் நடித்திருக்கிறார். இதுபோக ஜீனி என்னும் படத்திலும் ஜெயம் ரவி கவனம் செலுத்தி வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிறது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, மனிதன், என்றென்றும் புன்னகை பட இயக்குனர் அகமது உடன் ஜெயம் ரவி இணைந்த இறைவன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியுடன் நயன்தாரா இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் படம் வெளியாகும் என கூறப்படுகிறது பிரபாஸ் – கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் சலார் படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகிறது. அந்த திரைப்படத்துடன் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.





