- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க இதுதான் காரணம்... என்ன இப்படி சொல்லி இருக்காரு ஜெயம் ரவி!...

தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க இதுதான் காரணம்… என்ன இப்படி சொல்லி இருக்காரு ஜெயம் ரவி!…

- Advertisement -

சமீப காலங்களாகவே மிகப்பெரிய வெற்றியை கொடுக்க முடியாமல் திணறி வருகிறார் நடிகர் ஜெயம்ரவி. அவருக்கு கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது கோமாளி திரைப்படம் தான். அதற்கு முன்பு தனி ஒருவனில் கால் பதித்திருந்தார்.

ஆனால் அதன் பிறகு வெளியான எந்த திரைப்படங்களுமே ஜெயம் ரவிக்கு சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் அடித்து தூள் கிளப்பி இருந்தாலும், அந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயம் ரவிக்கான திரைப்படம் என்பதை நிதர்சனம்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம் பல பேருக்கு வந்தது கூட தெரியாது. கிட்டத்தட்ட மூன்றே நாட்களில் அந்த திரைப்படம் பல திரையரங்குகளில் இருந்து தூக்கி வீசப்பட்டது. பொருத்தம் இல்லாத கதை சம்பந்தமில்லாத திரைக்கதை என ஒட்டுமொத்த படமும் வெறுப்பேற்றியதால் ரசிகர்களால் அது நிராகரிக்கப்பட்டது.

எப்போது பூமி திரைப்படம் வெளியானதோ அப்போதிலிருந்து ஜெயம் ரவி இந்த சிக்கலில் தவித்து வருகிறார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இறைவன் திரைப்படமும் அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது. படத்தில் எந்த ஒரு காட்சியுமே மனதளவில் ஒட்டாததால் ரசிகர்கள் அதனை நிராகரித்தனர்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான சைரன் திரைப்படமும் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. படம் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் இருந்தாலும், அது ரசிகர்களிடம் போய் சேரவில்லை. இப்படியான சூழலில், அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி பட இயக்குனர் ராஜேஷ் உடன் இணைந்து பிரதர் எனும் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதுபோக ஜெனி காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களிலும் ஜெயம் ரவி இடம்பெற்றுள்ளார்.

இப்படியான சூழலில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைப் திரைப்படத்திலும் ஜெயம் ரவி இடம்பெற்றுள்ளார். இது குறித்து பேசி இருக்கும் அவர், மணிரத்னம் சார் கேட்டதால் என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. நான் இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறேன். எனது காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்