- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்பவும் அந்த பேரை சொல்லி என்னை கூப்பிடறாங்க - கில்லி விஜய் தங்கையா நடித்த புவனா...

இப்பவும் அந்த பேரை சொல்லி என்னை கூப்பிடறாங்க – கில்லி விஜய் தங்கையா நடித்த புவனா இப்படி சொல்றாரே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் கில்லி. இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் ஏராளமான தியேட்டர்களில், கில்லி படம் சக்கை போடு போட்டு வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக, தமிழில் பெரிய அளவில் ஹிட் படங்களே வராத நிலையில், இப்போது வெளிவந்துள்ள கில்லி படம் மிகப்பெரிய ஒரு வசூலை தியேட்டர்களுக்கு தந்து வருகிறது.

கில்லி படத்தில் உள்ள பல முக்கியமான அம்சங்களில் குறிப்பிடத்தக்கது, குடும்ப கதை படமாகவும் அமைந்திருந்தது. விஜயின் அப்பாவாக ஆஷிஷ் வித்யார்த்தி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாகவும், விஜயின் அம்மாவாக ஜானகி கணேஷூம் நடித்திருந்தனர். இதில் விஜயின் தங்கையாக புவனா என்ற கேரக்டரில் ஜெனிபர் நடித்திருந்தார். விஜயை டா என அழைத்து பேசுவதும், அப்பாவிடம் மாட்டி விடுவதும் யதார்த்தமான காட்சிகளாக இருந்தன.

- Advertisement -

விஜயின் தங்கையாக ஜெனிபர் நடிப்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக இருக்கும். ஒரு அண்ணன் – தங்கை பாசத்தை கலாட்டாவான அவர்களுடைய அந்த உறவை, இந்த படத்தில் மிக அழகாக காட்டியிருப்பார் டைரக்டர் தரணி. தெலுங்கில் எடுக்கப்பட்ட ஒக்கடு என்ற படம் தான் கில்லி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

மகேஷ் பாபு நடித்த ஒக்கடு தெலுங்கு படத்தில் அவருக்கு தம்பிதான் இருப்பார் என்ற நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு தங்கை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக, இந்த ஜெனிபர் தங்கை கேரக்டரை தரணி, உருவாக்கி இருக்கிறார். இப்போதும் கில்லி குடும்ப படமாக ரசிப்பதற்கு முக்கிய காரணம் விஜய், ஜெனிபர், விஜயின் அம்மாவாக நடித்த ஜானகி கணேஷ் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள், மிகவும் சிறப்பாக அமைந்ததுதான்.

- Advertisement -

கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜய் என்னை பார்த்து, ஏய் அரிசி மூட்டை என்ன உன் பிரண்ட்ஸை எல்லாம் கூட்டீட்டு வந்து என் ரூம்ல ஜங்கு புங்குன்னு ஆடிட்டு இருக்கே என்று கிண்டலாக என்னிடம் பேசுவார். இப்போதும் அந்த பெயர் எனக்கு நிலைத்து விட்டது. இப்போதும் என்னுடைய நெருங்கிய தோழிகள் சிலர், என்னை அரிசி மூட்டை என்றுதான் விளையாட்டாக கூப்பிடுவார்கள்.

கில்லி படத்தில், திருச்சிக்கு திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு விஜய், மதுரைக்கு சென்று விடுவார். அதுகுறித்து அவரது தந்தை ஆஷிஷ் வித்யார்த்தி விஜயிடம் விசாரிக்கும் காட்சியில், டேய் பதில சொல்லுடா என்று ஜெனிபர் விஜயை பார்த்து டயலாக் பேசுவார். அந்த வசனத்தை மறுபடி பேசு என்று அருகில் விஜய் உட்கார்ந்து ஆசையாக என்னிடம் கேட்பார் என்று அந்த நேர்காணலில் ஜெனிபர் குறிப்பிட்டு இருக்கிறார். இப்போது டிவி சீரியல்களிலும் சில படங்களிலும் ஜெனிபர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்