தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குனரான அறிமுகமான அவர் முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதன்பிறகு அவர் இயக்கிய மெட்ராஸ், காலா, கபாலி படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை தந்தன.
இதைத் தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படம் கடந்த மாதம் வெளியானது. சியான் விக்ரம் நடிப்பில், ஆங்கிலேயர் காலத்தில் தங்க சுரங்கம் அடிமைத் தொழிலாளர் கதை என்று கூறப்பட்ட இந்த படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை அதிருப்தியடையச் செய்தது. குறிப்பாக சில விஷயங்களில் யதார்த்தத்தை மீறி பா ரஞ்சித் தனது அறிவுத் திறமையை காட்டியிருப்பதாக விமர்சனமும் எழுந்தது.
தங்கலான் படம் பெரிய அளவில் வசூலை கடந்ததாக கூறப்பட்டாலும், ரூ. 100 கோடி வசூலை கடந்ததா, என்பதில் இன்னும் பலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி கிடைக்கவில்லை என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. குறிப்பாக சியான் விக்ரம் நடிப்பு, வீணாக்கி விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில் தங்கலான் படத்தை ரூ. 60 கோடிக்கு டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கியிருந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், திடீரென நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை, ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனால் விலையை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தங்கலான் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திடம் வற்புறுத்தியது.
முதலிலேயே ஒப்பந்தம் போட்டு தங்கலான் படத்துக்கான டிஜிட்டல் உரிமம் விலை பேசி முடித்துவிட்ட நிலையில், இப்படி திடீரென விலையை குறைக்க சொல்வது சரியல்ல என படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பு நிறுவனம் விலை குறைப்புக்கு சம்மதிக்கவில்லை. அதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பிடியை விலக்கிக் கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் பேசிய விலையை தர வேண்டும் என்று தங்கலான் படத்தயரிப்பு நிறுவனம் கூறிய நிலையில், நீங்கள் குறிப்பிட்ட தேதியில் படத்துக்கான கண்டென்ட் தரவில்லை. அந்த நிபந்தனைப்படி உங்கள் படத்தை நாங்கள் வாங்க முடியாது. அதனால் தங்கலான் படம் வாங்கும் டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்கிறோம் என்று கூறிவிட்டனர். இது தங்கலான் படக்குழுவை அதிர்ச்சிடைய செய்துள்ளது.





