- Advertisement -
Homeபொழுதுபோக்கு19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் இணையும் ஜீவா அஞ்சலி கூட்டணி - டைரக்டர் யார்...

19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையில் இணையும் ஜீவா அஞ்சலி கூட்டணி – டைரக்டர் யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனம் பெற்ற இயக்குனர்களில் ஒருவர் ராம். கடந்த 2007ம் ஆண்டில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கல்ட் கிளாசிக் திரைப்படம் கற்றது தமிழ். இந்த படத்தில் நடிகர் ஜீவா பிரபாகர் என்ற கேரக்டரிலும் நடிகை அஞ்சலி ஆனந்தி என்ற கேரக்டரும் நடித்திருந்தார்கள்.

கற்றது தமிழ் படத்தை பொருத்தவரை ஜீவா அஞ்சலி இருவரும் அந்த கேரக்டர்களாக வாழ்ந்திருப்பார்கள். நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகமான படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை அறிமுகப்படுத்திய குருவான இயக்குனர் ராம், எப்போது அழைத்தாலும் அவரது படங்களில் அஞ்சலி நடிக்க சம்மதித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதனால் தான் ராம் இயக்கும் படங்களில் பெரும்பாலும் சில காட்சிகளில் மட்டுமாவது அஞ்சலி நடித்து விடுகிறார். அதுமட்டுமின்றி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை அஞ்சலி, இயக்குனர் ராம் இயக்கும் படம் என்றால் சம்பளம் குறித்தே பேசுவது இல்லை. அவர் தருகிற சம்பளத்தை சந்தோஷமாக வாங்கிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் கற்றது தமிழ் படத்துக்கு பின் 19 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் ஜீவா நடிகை அஞ்சலி ஜோடியாக இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்து இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வசந்தபாலன். தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன், ஜீவா – அஞ்சலி இணையும் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வெயில் படத்தை தொடர்ந்து அங்காடித்தெரு அரவான் காவியத்தலைவன் ஜெயில் உள்ளிட்ட படங்களை வசந்தபாலன் இயக்கினார். கடைசியாக அர்ஜூன் தாஸ் துஷாரா விஜயன் காளி வெங்கட் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த அநீதி என்ற படத்தையும் வசந்தபாலன் இயக்கியிருந்தார். இதையடுத்து தற்போது ஜீவா அஞ்சலி நடிக்கும் படத்தை வசந்த பாலன் இயக்குகிறார்.

இந்த படத்தை துபாயை சேர்ந்த கண்ணன் ரவி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஜீவா நடித்த தலைவர் தம்பி தலைமையில் – டிடிடி படத்தை இயக்கியதும் இந்த தயாரிப்பு நிறுவனம்தான். இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு படத்திலும் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவா – அஞ்சலி இணையும் படம் என்பதால் இப்போதே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்