தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் பிலிம்ஸ். குறிப்பாக கேஎஸ் ரவிக்குமார் விக்ரமன் போன்ற பல இயக்குனர்களின் படங்களை தயாரித்தது சூப்பர் குட் பிலிம்ஸ் தான். இந்த நிறுவனத்தின் நிறுவனர் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி. விரைவில் தனது நிறுவனத்தின் 100வது படத்தை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் மூத்த மகன் நடிகர் ஜித்தன் ரமேஷ். இவர் ஜித்தன் ஒஸ்தி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் இவரது தம்பி நடிகர் ஜீவா போல் ஜித்தன் ரமேஷ் பெரிய அளவில் சினிமாவில் ரசிகர்களிடம் வரவேற்பை முடியவில்லை.
ஜித்தன் என்ற ஒரு படத்தை தவிர ஜித்தன் ரமேஷ் நடித்த எந்த படமும் சரியாக போகவில்லை. தயாரிப்பாளரின் மகனாக இருந்தும் அவர் நடித்த படங்களின் கதை திரைக்கதை சரியாக இல்லாததால் அந்த படங்கள் திரைக்கு வந்ததே தெரியாமல் வெளியே போய்விட்டது. இதில் ஜித்தன் படம் மட்டுமே ஓரளவுக்கு ஓடியதால் ஜித்தன் ரமேஷ் என்றே அவர் அழைக்கப்படுகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜித்தன் ரமேஷ் நடிகர் விஜய் நடித்த படம் குறித்து பேசியிருக்கிறார். அதுவும் ஒரு முக்கிய குற்றச்சாட்டை நடிகர் விஜய் மீது அவர் எழுப்பியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நேர்காணலில் நடிகர் ஜித்தன் ரமேஷ் கூறியதாவது, நான் நடித்த புலி வருது என்ற படத்தின் மையக்கருவும் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் என்ற படத்தின் கதை கருவும் ஒன்றுதான். இந்த இரண்டு படங்களையும் பார்த்தாலே அந்த ஒற்றுமை ரசிகர்களுக்கு தெளிவாக புரிந்துவிடும்.
புலி வருது என்கிற நான் நடித்த படத்தைப் பார்த்து தான் அழகிய தமிழ் மகன் படம் எடுக்கப்பட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. பெரிய ஹீரோ நடிக்கும் படம் என்றால் ஹிட் ஆகி விடுகிறது. என் படத்தில் அனைத்தும் இருந்தும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்று ஜித்தன் ரமேஷ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





