- Advertisement -
Homeபொழுதுபோக்குபெண் நடனக் கலைஞரை டான்ஸ் மாஸ்டர் ஜானி பாலியல் தொல்லை செய்த வழக்கு, ஜானி மாஸ்டரின்...

பெண் நடனக் கலைஞரை டான்ஸ் மாஸ்டர் ஜானி பாலியல் தொல்லை செய்த வழக்கு, ஜானி மாஸ்டரின் மனைவியும் விரைவில் கைது ஆகிறாரா? – இதென்னப்பா புது டிவிஸ்ட்டா இருக்குது?

- Advertisement -

கேரளாவில் பெண் நடிகைகள் மீது பாலியல் தொந்தரவு குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது, நடன பெண் கலைஞர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயிலர் படத்தில் காவலய்யா என்ற தமன்னா ஆடிய குத்தாட்ட பாடலுக்கு நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர். அதேபோல் பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து, ரஞ்சிதமே பாடலுக்கும், திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் ஜானி மாஸ்டர். இதனால் பல முன்னணி நடிகர்கள் தங்களது படங்களில் ஜானி மாஸ்டர் நடனம் அமைக்க வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு அவர் முன்னணி டான்ஸ் மாஸ்டராக புகழ்பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் மீது நடன பெண் கலைஞர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனால் ஜானி மாஸ்டர் தலைமுறைவானார். 2 தினங்களுக்கு முன் கோவாவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டமும் அவர் மீது பாய்ந்தது.

ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, தனது கணவர் ஒரு அப்பாவி. அவர் விரைவில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை துடைத்தெறிந்து விட்டு வெளியே வருவார் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது மட்டுமின்றி அப்படி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு உண்மை என நிரூபிக்கப்பட்டால், அவரை விட்டு நான் பிரிந்து செல்லவும் தயார் என்றும் அவர் பேசியிருந்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வைரலானது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜானி மாஸ்டரை தொடர்ந்து அவரது மனைவி ஆயிஷாவும் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அந்த மைனர் டான்ஸரை தனது கணவருக்கு இணங்கி செல்லுமாறு ஆயிஷா கூறியிருக்கிறார்.

மேலும் அந்த நடன பெண் கலைஞரை மதம் மாற்றி ஜானி மாஸ்டரை 2வது திருமணம் செய்து கொள்ளும்படி ஆயிஷா அவரை வற்புறுத்தியதாகவும் ஆயிஷா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜானி மாஸ்டர் கைதை அடுத்து அவரது மனைவி ஆயிஷாவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருப்புமுனை சம்பவத்தால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்