- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் நடிப்பை பலர் கேவலமாக விமர்சிக்கின்றனர், பேசிய சம்பளத்தை தராமல் ஏமாற்றி விட்டனர் - தக்லைஃப்...

என் நடிப்பை பலர் கேவலமாக விமர்சிக்கின்றனர், பேசிய சம்பளத்தை தராமல் ஏமாற்றி விட்டனர் – தக்லைஃப் பட மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் வேதனை!

- Advertisement -

மலையாளத்தில் முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருபவர் ஜோஜூ ஜார்ஜ். இவரது நடிப்பில் இயக்கத்தில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பணி படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் நாடோடிகள் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாக நடித்திருந்த அபிநயா நாயகியாக நடித்திருந்தார். மேலும் மதுரம் படத்திலும் ஜோஜூ ஜார்ஜ் மிக சிறப்பாக நடித்திருந்தார்.

தமிழிலும் தொடர்ந்து ஜோஜூ ஜார்ஜ் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சமீபத்தில் கமல்ஹாசனுடன் தக்லைஃப் ஆகிய படங்களிலும் அவர் நடித்திருந்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 2021ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான சுருளி படத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நாயகனாக நடித்திருந்தார். வித்யாசமான கதைகள், வித்யாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை உருவாக்கும் முக்கிய இயக்குனராக மலையாளத்தில் பெயர் பெற்றவர் லிஜோஸ் பெல்லிசேரி. அவர்தான் சுருளி படத்தை டைரக்ட் செய்து இருந்தார்.

சுருளி படம் வெளியான போது இந்த படத்தில் பேசப்பட்ட கொச்சையான வசனங்களுக்காக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கண்டனம் எழுந்தது. அதனால் ரசிகர்களில் பலரும் இந்த படத்தை மிக கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சுருளி படத்தில் நடித்ததற்காக தனக்கு சம்பளத்தொகை பாக்கி இன்னும் தரவில்லை என்றும் அந்தப் படத்தில் அவர் பேசிய வசனங்களால் தனது பெயர் சொந்த கிராமத்திலேயே கெட்டுப் போனதுதான் மிச்சம் என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் ஜோஜூ ஜார்ஜ் கூறுகையில், சுருளி படத்தில் வசனங்கள் ராவாக இருக்க வேண்டும் என்று கொச்சையாக எழுதப்பட்டிருந்தன. அதே சமயம் இந்த படம் விருது விழாக்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதற்காக இயல்பாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும்போது அவை நீக்கப்பட்டு விடும் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாக கூறினார்கள்.

அந்த நம்பிக்கையில் நான் இருந்தபோது தான் திடீரென அந்த படம் தியேட்டர்களில் வெளியானது. எந்த ஒரு கொச்சையான வார்த்தையையும் படத்திலிருந்து நீக்கவில்லை. இதனால் என்னுடைய சொந்த ஊரிலேயே என்னை பலரும் இப்படி வசனங்கள் பேசியிருக்கிறாயே என்று கேவலமாக விமர்சித்தார்கள். அத்துடன் இந்த படத்திற்காக பேசப்பட்ட என்னுடைய சம்பளத் தொகையும் இன்னும் முழுமையாக வழங்காமல் பாக்கியுள்ளது என்று நடிகர் ஜோஜூ ஜார்ஜ் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்