நடிகர் அஜீத்குமார் நேற்று, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் டாக்டர்களின் முழுநேர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர், முழு உடல் பரிசோதனைக்காக முதலில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தகவல் பரவியது. வழக்கமான மருத்துவ பரிசோதனைதான் என்றும் முதலில் கூறப்பட்டது.
அதன்பிறகு அவருக்கு இருதயம் தொடர்பான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படுகிறது. இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏதுவும் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே விடாமுயற்சி படப்பிடிப்பில் அவரது நெருங்கிய நண்பர் கலை இயக்குனர் மிலன், திடீர் மாரடைப்பால் காலமானார். அதில் இருந்தே, உடல் ஆரோக்கியத்தில் அஜீத்குமார் அதிக அக்கறை காட்டுகிறார் என்றும் தகவல் பரவியது.
இதற்கு மத்தியில் திடீரென, நடிகர் அஜீத்குமாருக்கு மூளையில் சிறு கட்டி இருந்தது, மருத்துவர்கள் நடத்திய மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து மதுரையில் இருந்து 2 சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, அவருக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து, அந்த கட்டி அகற்றப்பட்டதாகவும், அஜீத்குமார் முழு நலத்துடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் வைரலாக பரவி வரும் இந்த தகவல்கள் குறித்து, இதுவரை அஜீத்குமாரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா எந்தவிதமான தகவலும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் காதுக்கு கீழே மூளைக்கு செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காகவே அஜீத்குமாருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதாகவும் இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருப்பதாவது, நடிகர் அஜீத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பலவிதமான தகவல்கள் உலவி வருகின்றன. இதில் சரியான உண்மை என்னவென்று இன்னும் அதிகாரபூர்வமாக தெரியாததால், அஜீத் ரசிகர்கள் குழப்பத்திலும், கவலையிலும் உள்ளனர்.
பொதுவாக அஜர்பைஜான் போன்ற குளிர் நிறைந்த நாடுகளுக்கு செல்லும் போது நடிகர்கள் அதிகளவில் மதுபானம் குடிப்பது பழக்கம். அஜீத்குமாருக்கும் அந்த பழக்கம் உண்டு. அவரது நண்பர், கலை இயக்குனர் மிலன் மறைவுக்கு பிறகு மதுபான பழக்கத்தை அஜீத்குமார் நிறுத்தி விட்டார். திடீரென மதுப்பழக்கத்தை நிறுத்தினால் உடலில் பலவிதமான உபாதைகளை அது ஏற்படுத்தும். அதன் காரணமாகவே அஜீத்குமார் அப்பல்லோவில் அட்மிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது, என்று கூறியிருக்கிறார்.





