- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படம் வந்து 2 வருஷமாச்சு - வெங்கட்பிரபு இயக்கிய அந்த படமாவது திரைக்கு வருமா?...

விஜய் படம் வந்து 2 வருஷமாச்சு – வெங்கட்பிரபு இயக்கிய அந்த படமாவது திரைக்கு வருமா? அவர் மனசு வெச்சா தான் நடக்கும்!

- Advertisement -

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி போன்ற படங்களில் நடித்த அவர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு இயக்குனராக களத்தில் இறங்கி சென்னை 28 படத்தை இயக்கினார்.

சென்னை லோக்கல் பாய்ஸ் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சரோஜா கோவா மங்காத்தா மாநாடு என சில வெற்றிப் படங்களை கொடுத்த வெங்கட்பிரபு கடைசியாக இயக்கிய படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்.

- Advertisement -

நடிகர் விஜய் 2 வேடங்களில் நடித்த தி கோட் என்ற இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளியானது. கலவையான விமர்சனங்களுடன் கணிசமான வசூல் செய்தது. இந்த படம் ரூ. 445 கோடி என அந்த ஆண்டில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த முதல் படமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தி கோட் படத்துக்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சயின்ஸ்பிக்சன் படத்தை வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு கிடைக்கவில்லை. கடைசியில் கதை திரைக்கதையில் தனக்கு குழப்பம் என்று எஸ்கேவும் சத்தமின்றி ஒதுங்கி விட்டார்.

- Advertisement -

சிம்பு அஜீத்குமாரிடம் பட வாய்ப்பு கேட்ட வெங்கட்பிரபுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாநாடு 2 அல்லது மங்காத்தா 2 என 2 படங்களில் ஏதேனும் ஒன்றை இயக்கலாம் என்று திட்டமிட்ட வெங்கட்பிரபுவின் விருப்பம் எதுவுமே நிறைவேறவில்லை. இதற்கிடையே பல ஆண்டுகளாக அவர் இயக்கத்தில் உருவாகி கிடப்பில் உள்ள ஒரு படத்தை திரைக்கு கொண்டு வர அவர் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

நடிகர்கள் ஜெய் மிர்சி சிவா சத்யராஜ் மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பார்ட்டி என்கிற படம் பல பிரச்னைகளால் திரைக்கு வராமல் உள்ளது. அடிக்கடி பார்ட்டி பண்ணும் வழக்கம் கொண்ட வெங்கட்பிரபு இந்த படத்துக்கு பார்ட்டி என்றே டைட்டில் வைத்துள்ளார். சமீபத்தில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம் இந்த படத்தை போட்டுக் காட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய வெங்கட்பிரபு முயற்சி எடுத்துள்ளார். படம் சூப்பராக உள்ளதாக அவரும் பாராட்டியதால் விரைவில் பார்ட்டி திரைக்கு வர வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்