- Advertisement -
Homeபொழுதுபோக்குஜோஜு ஜார்ஜ் எடுத்திருக்கும் புதிய அவதாரம்.. நடிப்பில் மட்டுமல்ல இதிலும் கலக்கப்போறாரு.. வேற லெவல் அப்டே

ஜோஜு ஜார்ஜ் எடுத்திருக்கும் புதிய அவதாரம்.. நடிப்பில் மட்டுமல்ல இதிலும் கலக்கப்போறாரு.. வேற லெவல் அப்டே

- Advertisement -

மலையாள திரையுலகில் 24 ஆண்டுகால பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளார் ஜோஜு ஜார்ஜ். அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக “ஜோசப்” படத்தின் வெற்றி அமைந்தது. ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருந்தார். அந்த படம் அவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படம் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவாக்கியது. “ஜோசப்” படம் தேசிய விருது குழுவின் சிறப்பு ஜூரியின் பாராட்டுகளை பெற்றது.

மேலும் அவரது நடிப்பில் வெளியான “சோழா” வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா – ஒரிசான்டி போட்டி, ஜெனிவா சர்வதேச திரைப்பட விழா – சர்வதேச சிறப்புப் போட்டி மற்றும் டோக்கியோ ஃபிலிமெக்ஸ் – சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் அனைவரையும் கவர செய்தது. ஜோஜு ஜார் தனது சினிமா பயணத்தில், “ஹலால் லவ் ஸ்டோரி,” “ராமண்டே எடந்தோட்டம்,” “லுக்கா சுப்பி,” மற்றும் “துரைமுகம்” போன்ற படங்களின் வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. அந்த வெற்றிகளின் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் “ஜூன்”, “ஆக்ஷன் ஹீரோ பிஜு” போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்கில் நடித்தும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்

- Advertisement -

நடிகராக வெற்றி பெற்ற ஜோஜு ஜார்ஜ் இம்முறை இயக்குநராக தனது கேரியரில் அடுத்தகட்ட பயணத்தை ஆரம்பித்திருஇக்கிறார். அந்த வகையில் அவர் பனி என்ற படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். திருச்சூர் நகரத்தில் நடக்கும் இரண்டு கேங்ஸ்டர்களின் கதைதான் படம். ஜோஜு ஜார்ஜ் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அபிநயா ஹீரோயின். இவர் நாடோடிகள் படத்திலும் நடித்திருக்க்கிறார். விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் பனி படத்தை ஜோஜுவின் தயாரிப்பு நிறுவனமான அப்பு பாத்து பப்பு புரொடக்ஷன்ஸ் மற்றும் ஏடி ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் எம் ரியாஸ் ஆதம் மற்றும் சிஜோ வட்கான் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிநயா தவிர, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், மெர்லட் ஆன் தாமஸ், லங்கா லட்சுமி, சாரா ரோஸ் ஜோசப், பாபு நம்பூதிரி, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரஞ்சித் வேலாயுதன், பிட்டோ டேவிஸ், ரினோஷ் ஜார்ஜ், இயன் மற்றும் இவான் , அன்பு , ரமேஷ் கிரிஜா, டோனி ஜான்சன், பாபி குரியன் மற்றும் பிக் பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சாகர் மற்றும் ஜுனைஸ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஜோஜு நாளை முன்னிட்டு பனி படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல இயக்குனர் வேணுவும், படத்தொகுப்பை மனு ஆண்டனியும், இசையை விஷ்ணு விஜயாவும் கவனிக்கின்றனர். அதேபோல் அஜய் அதாத் ஒலி வடிவமைப்பு, சந்தோஷ ராமன் தயாரிப்பு வடிவமைப்பு எம்.ஜி.ரோஷன் மேக்கப், காஸ்ட்யூம் டிசைனராக சமீரா சனீஷ், ஸ்டண்ட் மாஸ்டராக தினேஷ் சுப்பராயன், நடன அமைப்பாளராக சந்தியா மாஸ்டர் உள்ளிட்டோர் பணியாற்றியிருக்கின்றனர். படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் நிறுவனம், விநியோகம் செய்கிறது. இணை தயாரிப்பாளராக வர்கி ஜார்ஜ் பணியாற்றுகிறார்.

- Advertisement -

சற்று முன்