- Advertisement -
மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா கூப்பிட்டு சொன்னதால் கமல்ஹாசன் சண்டியர் படத்தை விருமாண்டி என்று மாற்றினார். அவங்க மேல் இருந்த மரியாதை. அப்புறம் விருமாண்டி என்கிற தலைப்பையே ஜெயலலிதா தான் சொன்னாங்க. அவரும் அதையே வெச்சார். ஆனால் இன்று சூழ்நிலை அப்படி கிடையாது. கிருஷ்ணசாமி ஒரு கட்சியின் தலைவர் என்றால் கமல்ஹாசனும் ஒரு கட்சியின் தலைவர். மக்கள் செல்வாக்கு கமலுக்கும் இருக்குது. வாங்க பார்க்கலாம் என்று சொல்லிடுவார். தனிமனிதனாக ஒரு நடிகராக இருக்கும் போது நீங்க அவரை மிரட்டலாம். ஒரு அரசியல்வாதியாக மாறிய பிறகு யாரையும் மிரட்ட முடியாது என்று அந்தணன் கூறியிருக்கிறார்.





