- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு இது தப்புன்னு தெரியாதா? அவர் என்ன குழந்தையா?- வம்பு பேச்சால் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வலைப்பேச்சு...

விஜய்க்கு இது தப்புன்னு தெரியாதா? அவர் என்ன குழந்தையா?- வம்பு பேச்சால் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட வலைப்பேச்சு பிஸ்மி

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளிவர தயாராகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாத்துறையையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய புகழை அடைந்துள்ளார். அவரது “விக்ரம்” திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டையை நடத்தி சாதனை படைத்தது. இந்த வரிசையில் விஜய்யின் “லியோ” திரைப்படமும் வேற லெவலில் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்தில் “லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடிதான் வரவா” என்ற பாடல் சிங்கிளாக வெளியானது. அனிருத் இசையில் இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தார். இந்த பாடலை விஷ்ணு எடவன் என்பவர் எழுதியிருந்தார். விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகப்பெரிய டிரீட் ஆக அமைந்தது.

இந்த பாடலில் விஜய் முழுக்க முழுக்க வாயில் சிகரெட்டுடனே வலம் வந்தார். மேலும் இதில் சில வரிகள் மிக சர்ச்சைக்குரியதாகவே இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக ஆக, இந்த பாடலில் விஜய் சிகரெட் பிடித்தவாறு இடம்பெறும் பகுதிகளில் எல்லாம் “புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு” என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டனர்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, விஜய்யை குறித்து கடுமையாக பேசியுள்ளார். “லியோ பாடல் காட்சிகள், வரிகள் என அனைத்தும் சமூக சீர்கேட்டை வலியுறுத்துகிற வரிகளாகவே இருக்கிறது. ஒரு பக்கம் விஜய் தனது வாயில் சிகரெட்டை வைத்து ஊதித்தள்ளுகிறார். மறு பக்கம் பாடல் வரிகள் எல்லாம் இளைஞர்களை தவறான திசையில் திருப்பிவிடுவது போல் இருக்கிறது.

நான் என்ன கேட்கிறேன் என்றால், விஜய் என்ன எல்கேஜி படிக்கின்ற குழந்தையா? அவருக்கு இதெல்லாம் தெரியாதா? விஜய் மாதிரியான மிகப்பெரிய நடிகர்கள் அவர்கள் படத்தில் இடம்பெறும் பாடல்களை அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி என்றால் இவ்வளவு மோசமான வரிகளை கொண்ட பாடலை தேர்வு செய்ததே விஜய்தான்.

இந்த வரிகள் எல்லாம் தப்பானது என்று அவருக்கு தெரியும். ஆனால் விஜய்யை பொறுத்தவரை லியோ படத்திற்கு ஒரு சர்ச்சை தேவைப்படுகிறது. இந்த சர்ச்சையை வைத்துத்தான் லியோ படத்தை ஓட்ட வேண்டும். பொதுவாக விஜய் படங்களில் அரசியல் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அது ஒரு சர்ச்சையை உண்டு செய்யும். அதை வைத்து இவர்கள் கல்லா கட்டிவிடுவார்கள்.

லியோ படத்தை பொறுத்தவரை அது ஒரு போதை பொருள் மாஃபியா கதை. இதில் அரசியல் குறித்து எதுவும் கிடையாது. ஆதலால் இப்படிப்பட்ட ஒரு படத்தில் சர்ச்சை எழுவதற்கு வாய்ப்பில்லை என்பதனால்தான் திட்டமிட்டு இந்த பாடலை உருவாக்கியிருக்கின்றனர்” என்று பிஸ்மி அப்பேட்டியில் பேசியுள்ளார். பிஸ்மி இவ்வாறு பேட்டியளித்தது விஜய் ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

- Advertisement -

சற்று முன்