- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அரசியலுக்கு வந்தா இதுதான் கதி, எழுதிவச்சிக்கோங்க- கொடூரமாக சவால் விடும் மூத்த பத்திரிக்கையாளர்

விஜய் அரசியலுக்கு வந்தா இதுதான் கதி, எழுதிவச்சிக்கோங்க- கொடூரமாக சவால் விடும் மூத்த பத்திரிக்கையாளர்

- Advertisement -

விஜய் அரசியலுக்கு வருவது குறித்தான பேச்சுக்கள் சமீப காலமாக மிகவும் பலமாக அடிபடுகிறது. விரைவில் விஜய் கட்சித் தொடங்க உள்ளதற்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று பலரும் கூறுகிறார்கள்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் சான்றிதழையும் விஜய் வழங்கியபோது “அவர் விரைவிலேயே அரசியல் கட்சி தொடங்க உள்ளார். அதற்கான முன்னோட்டம்தான் இது” என்று கூறினார்கள்.

- Advertisement -

வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் பலர் கூறுகின்றனர். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “பொதுவாக ரசிகர்களால் முதல் நாள் படம் வெளியாகும்போது தோரணம் கட்டுவது, அலப்பறை செய்வது இது மட்டும்தான் இவர்களால் முடியும். ஒரு படம் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்றால் காமன் ஆடியன்ஸ் வந்தாலும் ஒரு படம் வெற்றியடையும்.

- Advertisement -

ஒரு படம் வெற்றியடைவதற்கே பொது மக்களின் ஆதரவு தேவை என்னும்போது முதலமைச்சர் ஆவதற்கு மக்களின் ஆதரவு வேண்டுமா, வேண்டாமா.

எல்லா நடிகர்களுக்கும் முதல்வர் ஆகவேண்டும் என்ற கனவு இருக்கிறது. விஜய்க்கும் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. இன்றைக்கு 6 லட்சத்து 20 கோடி பேர் தமிழ்நாட்டின் வாக்காளர்கள். இதில் விஜய் ரசிகர்கள் சில லட்சங்களில்தான் இருப்பார்கள்.

இந்த மைனாரிட்டியால் விஜய்யை வெற்றிபெற வைக்க முடியாது. விஜய்யை தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கவும் முடியாது. இதுதான் யதார்த்தம்.

பீஸ்ட் படம் வந்தபோது அந்த படத்தை வெற்றியடைய வைக்கும் சக்தி கூட விஜய் ரசிகர்களுக்கு கிடையாது. ஆக ரசிகர்களுக்குத்தான் இந்த அரிப்பு. எந்த மக்களும் நடிகர்களை நாடாள வேண்டும் என்று அழைக்கவில்லை. ஆகவே விஜய் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கும் தோல்விதான் பரிசாக கிடைக்கும். இன்னும் சொல்லப்போனால் பல தொகுதிகளில் விஜய் கட்சி டெபாசிட்டை இழக்கும். இதெல்லாம் நடக்குதா இல்லையான்னு மட்டும் பாருங்க” என்று சவால் விட்டிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்