தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு தரப்பில் நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, கரூர் விவகாரம் மற்றும் ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் என இரண்டு தரப்பில் இருந்து நடிகர் விஜய்க்கு கடும் நெருக்கடி தரப்படுகிறது. கரூர் விவகாரத்தில் தவெக கட்சியின் முன்னிலை தலைவர்களை அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
அதற்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஜய் கரூர் சம்பவம் குறித்து நேரில் விசாரிக்கப்பட இருக்கிறார். இந்த விசாரணைக்கு தவெக கட்சியின் முக்கிய தலைமை நிர்வாகிகளை ஒன்றாக அழைக்காமல் தனித்தனியாக அழைக்க காரணமே பாஜக கூட்டணியில் விஜயை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான்.
கரூர் விவகாரத்தை வைத்து ஒரு பக்கம் ஜனநாயகம் படத்தின் தணிகைச் சான்றுக்காக கொடுக்கப்படும் நெருக்கடி மறுபக்கம் என இரண்டு விதங்களில் விஜய்க்கு நெருக்கடி தருகிறார்கள். சென்சார் தரப்பில் ஜனநாயகன் படத்துக்கு எந்த ஒரு கட் சீனும் கிடையாது. எந்த மியூட்டும் கிடையாது. தேசிய விருது வாங்கிய பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் படம் என்பதையும் இதில் கவனிக்க வேண்டும்.
ஜனநாயகன் படத்தில் சொல்லப்பட்ட சிறிய மாற்றத்தையும் கடந்த டிசம்பர் 24ம் தேதியே படக்குழு தரப்பில் சரி செய்துவிட்டது. அன்றைய தேதியே படத்தின் தணிக்கை சான்றிதழை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சென்சார் போர்டு தரப்பில் கொடுக்கப்படவில்லை. இந்த படம் வரும் 9ம் தேதி ரிலீசாக வாய்ப்பில்லை.
அடுத்து 10ம் தேதி ரிலீஸ் ஆகும் அல்லது இன்னும் சில வாரங்கள் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள பலவற்றையும் வைத்து விஜய்யை மிரட்டி பார்க்கிறார்கள். கரூர் வழக்கில் விஜயை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் அது நடப்பதற்கு வாய்ப்பில்லை. விஜயை சிறைக்கு அனுப்பி விட்டால் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் பரபரப்பாக பேசியிருக்கிறார்.இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனால் ஜனநாயகன் படம் 9ம் தேதி ரிலீஸ் ஆகும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.





