- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு வருகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? ஆவேசமாக பேசிய பிரபலம் - எம்ஜிஆருக்கு...

நடிகர் விஜய்க்கு வருகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா? ஆவேசமாக பேசிய பிரபலம் – எம்ஜிஆருக்கு நடந்த மேஜிக் என்ன தெரியுமா?

- Advertisement -

திரைப்படங்களில் நடித்து மக்களின் மனங்களை வென்ற எம்ஜிஆர் பிறகு அதிமுக என்ற அரசியல் கட்சியை துவங்கி தமிழக மக்களின் அமோக ஆதரவை பெற்றார். 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கினார். எம்ஜிஆரை போல நடிகர் விஜய்க்கும் மக்கள் ஆதரவு கிடைத்து வரும் நிலையில், விஜய்க்கு வருகிற கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, அஜீத்குமாருக்கு கூட்டம் வரும். நயன்தாராவுக்கு கூட்டம் வரும். ஷகிலா ரோட்டுல நடந்து போனாக்கூட கூட்டம் வரும். அதெல்லாம் வேற. ஆனால் அந்த கூட்டத்துக்கும் திருச்சியில் விஜய்க்கு திரண்ட கூட்டத்துக்கும் வித்யாசம் இருக்குது.

- Advertisement -

நான் சின்ன வயதில் இருந்த போது எம்ஜிஆருக்கு திரண்ட கூட்டத்தை எல்லாம் நேரில் பார்த்திருக்கிறேன். எம்ஜிஆர் ஒரு இடத்துக்கு பொதுக்கூட்டத்துக்கு மாலை 5 மணிக்கு வருகிறார் என்று விளம்பரம் செய்துவிட்டால், அந்த இடத்தில் காலை 9 மணிக்கே மக்கள் கூட்டம் வந்துவிடும். மேடைக்கு பக்கத்தில் நிற்கணும். எம்ஜிஆரை பக்கத்துல பார்க்கணும் என்று மக்கள் திரண்டு விடுவர்.

அப்படி மாலை 5 மணிக்கு வர வேண்டிய எம்ஜிஆர், அடுத்த நாள் காலை 5 மணிக்கு வந்த சம்பவம் எல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் அதுவரை அந்த மக்கள் கூட்டம் கலையால் அங்கேயே இடத்தை விட்டு அசையாமல் காத்திருந்து எம்ஜிஆரை நேரில் பார்த்தனர். இந்த மேஜிக் எம்ஜிஆர் ஒருவரைத் தவிர வேறு எந்த ஒரு தலைவருக்கும் நடந்தது இல்லை. எனக்கு தெரிந்து எம்ஜிஆருக்கு பிறகு அது விஜய்க்கு தான் நடந்திருக்கிறது.

- Advertisement -

திருச்சி வந்த விஜய் மரக்கடை என்ற பகுதிக்கு வர ஐந்து மணி நேரமாகி இருக்கிறது. அந்தளவுக்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அதே போல் அரியலூருக்கு வர ஏழரை மணி நேரமாகி இருக்கிறது. அப்போதும் மக்கள் பெரிய கூட்டமாக அங்கு காத்திருக்கின்றனர். நடிகனை பார்க்கும் கூட்டம் அப்படி நிற்காது. ஆனால் அதில் அப்படிப்பட்ட ஒரு கூட்டமும் இருந்திருக்கும்.

பார்க்க வந்த அத்தனை பேருமே விஜய்க்கு ஓட்டுப் போடுவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அதே நேரத்தில் அந்த கூட்டம் ஓட்டாக மாறாது என்றும் அபத்தமாக சொல்ல முடியாது. விஜயை பார்க்க 5 மணி நேரம் காத்திருக்கிற ஒருவர், தேர்தலில் விஜய்க்கு ஓட்டுப் போடாமல் யாருக்கு போடுவார். அதனால் அந்த கூட்டம் ஓட்டாக மாறாது என்று பேசுவது அறியாமை என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்