சினிமாவில் நடிக்கும் பல நடிகர்கள் பல நடிகைகள் தங்களுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளை காதலித்து திருமணம் செய்துக் கொள்கின்றனர். அப்படி பலரும் நட்சத்திர தம்பதிகளாக இருக்கின்றனர். இது தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் நட்சத்திர தம்பதிகள் கணவன் மனைவியாக உள்ளனர்.
தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். ஆனால் பல ஆணடுகளாக தமிழ் சினிமா துறையில் ஆதர்ஷன தம்பதிகளாக அஜீத்குமார் ஷாலினி பிரசன்னா சினேகா ஆகிய ஜோடிகளை ரசிகர்கள் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். நல்ல ஒற்றுமையான நட்சத்திர தம்பதி என பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகை சினேகா பல படங்களில் பல ஹீரோக்களுடன் நடித்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் பிரசன்னாவுக்கு மனைவியாக நடித்தார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பிறகு 2012ம் ஆண்டில் இருவரும் பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். ஒரு மகனும் ஒரு மகளும் இந்த நட்சத்திர தம்பதிக்கு உள்ளனர்.
திருமணத்துக்கு பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் குறிப்பிட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார். வேலைக்காரன் பட்டாஸ் தி கோட் டிராகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் டிவி சேனல்களில் ரியாலிடி ஷோ நடுவராக சினேகா பங்கேற்று வருகிறார். சினேகாலயா சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடையும் சென்னையில் நடத்தி வருகிறார்.
பிரசன்னாவும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அஜீத்குமார் நடிப்பில் வெளியாக உள்ள குட் பேட் அக்லி படத்தில் பிரசன்னா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரசன்னா, சினேகா இருவரும் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று அண்ணாமலையாரை வழிப்பட்டனர். அப்போது அவர்கள் 14 கிமீ சுற்றளவில் உள்ள கிரிவலப் பாதையிலும் சென்றனர்.
மஞ்சள் நிற சுடிதாரில் நடிகை சினேகாவும், வேட்டி பனியன் கெட்டப்பில் பிரசன்னாவும் கிரிவலப் பாதையில் நடந்து வந்தனர். அப்போது ரசிகர்கள் சிலர் அவர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். அப்போது பிரசன்னா, சினேகா இருவரும் செருப்புகளை அணிந்த நிலையில் கிரிவலப் பாதையில் நடந்து வந்தனர். இந்த வீடியோ வெளியான நிலையில், புனிதம் நிறைந்த கிரிவலப் பாதையில் அவர் செருப்புகளுடன் நடந்து வந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால் ஒரு சில பக்தர்கள் கிரிவல பாதையில் செல்லும்போது செருப்புகள், ஷாக்ஸ் அணிந்தபடியே கிரிவலம் செல்வதும் குறிப்பிடத்தக்கது.





