- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் - போலீசார் தகவல்களை மறைப்பது ஏன்?...

ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்த முக்கிய குற்றவாளிகள் – போலீசார் தகவல்களை மறைப்பது ஏன்? கேள்வி எழுப்பிய பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது. சென்சார் பிரச்னை காரணமாக சினிமா தியேட்டர்களில் ரீலீஸ் ஆகாத இந்த படம் இணையத்தில் லீக் ஆனது தமிழ் சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் உச்ச நட்சத்திர நடிகராக விஜய் படம் இப்படி லீக் ஆனது பெரிய கவலையை ஏற்படுத்தியது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக உள்ள விஜய், இந்த படம்தான் தனது கடைசி படம் என அறிவித்த நிலையில் ஜனநாயகன் படம் இப்படி இணையத்தில் லீக் ஆனது பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்தது. இதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஷால் ஜீவா சிவகார்த்திகேயன் குஷ்பு உள்ளிட்ட தமிழ் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி போன்றவர்களும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இதற்கிடையே ஜனநாயகன் படத்தை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த லோக்கல் கேபிள் டிவி உரிமையாளர் ஒருவர் ஒளிபரப்பிய தகவல் இன்னும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த லோக்கல் டிவி ஆபரேட்டரை போலீசார் கைது செய்த நிலையில், ஜனநாயகன் படத்தை இப்படி ஒளிபரப்ப கோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சூழலில் ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆன விவகாரம் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். உதவி எடிட்டர் எனக் கூறப்படும் அவர்தான் இந்த படத்தை முறைகேடாக டவுன்லோடு செய்து இணையத்தில் கசிய விட்டவர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அவரை பற்றிய முழு தகவல்களை போலீசார் இதுவரை தெரிவிக்கவில்லை.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருப்பதாவது, ஜனநாயகன் படத்தை முறைகேடாக இணையத்தில் லீக் செய்த நபரின் முக்கிய தகவல்களை போலீசார் வெளியிடாமல் தவிர்க்கின்றனர். இப்படிப்பட்ட ஒரு நபரை சமுதாயத்தின் முன்பு அடையாளப்படுத்துவது முக்கியம். இப்படி செய்யாமல் தவிர்ப்பது பல கேள்விகளை சந்தேகங்களை எழுப்புகிறது.

உதவி எடிட்டர்தான் இந்த படத்தை லீக் செய்தார் என்றால், ஜனநாயகன் படத்தில் பணிபுரிந்த உதவி எடிட்டர்களை ரசிகர்கள் சந்தேகப்படவும் அவர்களுக்கு பிரச்னை தரவும் வாய்ப்புள்ளது. இதனால் இதில் சம்பந்தமே இல்லாத அப்பாவிகளும் பாதிக்கப்படலாம். எனவே உண்மையான குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேண்டும். வெளியுலகத்துக்கு சொல்ல வேண்டும். அதுதான் இதுபோன்ற தவறுகள் தொடராமல் தடுக்கும் என்று ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்