- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவது ஏன்? - உண்மைையை புட்டு புட்டு...

ரஜினி நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் தருவது ஏன்? – உண்மைையை புட்டு புட்டு வைத்த பிரபலம்!

- Advertisement -

உடல் தோற்றத்துக்கு ஏற்ப வயதுக்கு ஏற்ற உடைகளை அணியும்போதுதான் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். குறிப்பாக இளமையான தோற்றத்தில் இருக்கும் இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் அணிவதும், 60 வயது கடந்தவர்கள் வெள்ளை வேட்டி சட்டை அணிவதும்தான் பார்ப்பதற்கு பொருத்தமாக இருக்கும். அதே நேரத்தில் தொள தொள உடைகளை அணிந்தாலும் பார்க்க சகிக்காது.

உடை விஷயத்தை போலதான் திரைப்படங்களில் நடிக்கும் கேரக்டர்களும் ஒரு ஹீரோவுக்கு சரியானதாக பொருந்த வேண்டும். வயது உடல் தோற்றம் பொருத்து அதற்கேற்ப கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும். 74 வயதிலும் ஹீரோவாக நடிக்கும் ரஜினிகாந்த் இந்த விஷயத்தை மறந்து போனதுதான் அவரது தொடர் தோல்விக்கு காரணம் என்று இப்போது கருத்து எழுந்துள்ளது.

குறிப்பாக சமீபத்தில் வெளியான கூலி படத்தில் பல காட்சிகளில் ரஜினியின் முதுமையான தோற்றம் அப்பட்டமாக தெரிகிறது. பல காட்சிகளில் அவரது முதுமையின் தளர்வு திரையில் வெளிப்படுகிறது. இதற்கு பிறகும் முழுமையான ஹீரோ கேரக்டர்களில் அவர் நடிப்பது அதுவும் பில்டப் ஹீரோயிசம் காட்டுவது அவரது ரசிகர்களுக்கே மன சோர்வை ஏற்படுத்தி விடுகிறது.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, சமீப காலமாக ரஜினியின் படங்கள் சற்று சறுக்கல்களை தான் சந்தித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரஜினி கதை கேட்கும்போது இது நமக்கு செட் ஆகுமா, நமது ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று பார்த்து தான் கதையை செலக்ட் செய்வார்.

ஆனால் இப்போது ரஜினியின் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று பான் இந்தியா என்று பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள். அவரும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். தயாரிப்பாளருக்கு லாபம் வர வேண்டும் என்று ரஜினி அதற்கான கதையை தேர்வு செய்கிறார். சில நேரங்களில் அது வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் தோற்றுவிடுகிறது.

ரஜினி முன்பு கொஞ்சம் இளமையாக இருப்பார். அதனால் 10 பேரை அடிப்பார். ஆனால் இன்றைக்கு அவருடைய வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க வேண்டிய சிக்கலில் தள்ளப்பட்டுள்ளார். அதனால் தற்போது ஆடியன்ஸ்க்கு ஜனரஞ்சகம் குறைவாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் அவரின் படங்களுக்கு முன்பு போல இப்போது மவுசு இருப்பதில்லை என்று ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்