தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகிகளாக கடந்த 1980களில் வலம் வந்த நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா. இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். கேரளாவை சேர்ந்த இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் சத்யராஜ் பிரபு கார்த்திக் விஜயகாந்த் என நட்சத்திர ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர்கள்.
இந்த நிலையில் தனது அக்கா அம்பிகாவும், தம்பி மல்லிகார்ஜூனா குஞ்சன் இருவரும் சேர்ந்துக்கொண்டு 46 கோடி ரூபாய் செக் மோசடி செய்ய முயற்சித்ததாக ராதா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்காக தான் அம்பிகா இத்தனை நாள் தவெகவுக்கு முட்டுக்கொடுத்தாரா என்று பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இன்று வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியதாவது, நடிகை அம்பிகா மீது அவரது தங்கை ராதா மோசடி புகார் அளித்திருக்கிறார். சமீபகாலமாகவே அம்பிகா, விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார். தம்பி விஜய் தம்பி விஜய் என்று ரொம்பவும் சப்போர்ட் ஆக பேசினார்.
நடிகை திரிஷா, விஜய் செல்லும் இடங்களுக்கு சென்று அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தக் கூடாது. நமக்குள் நட்பு இருந்தாலும் நம்மால் ஒருவருக்கு பாதிப்பு வரும் என்றால் நாம் அந்த நட்பை பொது இடத்தில் வெளிப்படுத்த கூடாது என்று சமீபத்தில் நடிகை திரிஷாவுக்கு அட்வைஸ் செய்திருந்தார்.
மேலும் நடிகை திரிஷா குறித்து யாராவது விமர்சனம் செய்தால், அவரும் ஒரு பெண். நடிகையாக இருப்பவர். அப்படி தவறாக விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று திரிஷாவுக்கும் ஆதரவாக அம்பிகா பேசி வந்தார். மேலும் விஜய் சேதுபதி பேசிய கருத்துக்கும், அம்பிகா தரப்பில் எதிர்ப்பு இருந்தது.
என்ன இது, விஜய்க்கும் தவெக ஆட்சிக்கும் அம்பிகா இப்படி ஆதரவு தருகிறாரே? விரைவில் தவெக கட்சியில் இணையப் போகிறாரா? அல்லது இடைத்தேர்தலில் பிரசாரம் எதுவும் செய்யப் போகிறாரா என்றுகூட கேள்வி எழுந்தது. இப்போது பார்த்தால் சோளியும் குடுமியும் சும்மா ஆடாது என்ற பழமொழி போல, இந்த மோசடி பிரச்னைகள் வரும் என்றுதான் விஜய்க்கு அம்பிகா முட்டுக் கொடுத்திருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது என்று செய்யாறு பாலு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





